டேவிட் அட்டன்பரோ – குறிப்பிட்டு சொல்லக் கூடிய ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் விலங்குகள் பற்றிய பல ஆவணப்படங்களில் பணி புரிந்து உள்ளார்.
DAVID ATTENBOROUGH: A LIFE ON OUR PLANET (2020)
தனிப்பட்ட முறையில் அவருடைய விசிறி நான். அவருடைய டாக்குமெண்டரிகள் அனைத்தும் வாவ் சொல்ல வைக்கும் ரகங்கள். Planet Earth, Blue Planet, Life on Earth போன்ற அவரின் டாக்குமெண்டரிகளை பார்த்து பிரமிப்பு அடைந்திருக்கிறேன்.
இவருடைய வயது 94. இந்த வயதில் ஒரு டாக்குமெண்டரி வெளியிட்டு உள்ளார் என்றதும் உடனே ஆர்வம் தொற்றிக் கொண்டது.
படத்தின் ஆரம்பத்தில் ஒரு பாழடைந்த நகரம் காட்டப்படுகிறது. கைவிடப்பட்ட கட்டிடத்தில் இருந்து டேவிட் அட்டன்பரோ கேமரா மற்றும் நமக்காக பேச ஆரம்பிக்கிறார்.
ஒரு சிறிய மனித தவறு தற்போது தான் நிற்கும் செர்னோபில் மற்றும் சுற்றுப்புறத்தை எவ்வாறு மனிதர்கள் வாழ முடியாமல் மாற்றிவிட்டது என்பதை விளக்குகிறார்.
தான் தன்னுடைய Career – ஐ தொடங்கும் போது இருந்த அளவிலான காடுகள் மற்றும் Bio-diversity தற்போது இல்லை என்கிறார். தான் உலகில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் போய் வந்து ஆவணப்படுத்தியது பற்றியும் பேசுகிறார்.
பூமி இந்த 50+ ஆண்டுகளில் மனிதர்களால் எவ்வாறு சூறையாடப்பட்டு உள்ளது என்பதையும் புள்ளிவிபரங்களுடன் புட்டு புட்டு வைக்கிறார்.
எடுத்துக்காட்டாக ஆரம்பத்தில் 66% காடுகள் இருந்த பூமியில் தற்போது உள்ள காடுகள் 33% மட்டுமே…
இதுவரை உலகம் 5 பேரழிவுகளை சந்தித்து உள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் மீண்டெழுந்து வந்து உள்ளது. 6 வது முறை இது போன்ற அழிவு வந்தால் கண்டிப்பாக இயற்கை மீண்டு விடும் ஆனால் மனித இனம் அதில் இருப்பது சந்தேகமே என்கிறார்…
அதோடு மட்டுமல்லாமல் எவ்வாறு உலகை அழிவிலிருந்து எவ்வாறு காப்பாற்ற முடியும் என்பதை பற்றியும் ஆதாரங்களுடன் பட்டியல் இடுகிறார். உதாரணமாக நெதர்லாந்து மற்றும் கோஸ்ட்டா ரிக்கா போன்ற நாடுகள் எவ்வாறு இயற்கையை பாதுகாக்கின்றன என்பதை கூறுகிறார்.
கடைசியில் மனிதர்களால் கைவிடப்பட்ட செர்னோபில்லில் எவ்வாறு காடுகள் மறுபடியும் உருவாகி உள்ளது மற்றும் விலங்குகளின் புகலிடமாக இருக்கிறது என்பதை காட்டுவது அருமை.
ஏன் இந்த டாக்குமெண்டரியை பார்க்க வேண்டும் என்பதற்கு 1000 காரணங்கள் என்னால் சொல்ல முடியும்.
இதை பார்க்காமல் இருப்பதற்கு என்னால் ஒரு காரணம் கூட சொல்ல முடியாது.
கண்டிப்பாக பாருங்கள்… முடிந்தால் குழந்தைகளையும் பார்க்க வைத்து அவர்களுக்கு புரியவில்லை என்றால் விளக்கம் கூறுங்கள்.
David Attenborough – Respect Sir….
IMDb Rating : 9.2/ 10
Released in Netflix
Directors: Alastair Fothergill, Jonnie Hughes and Keith Scholey
Cast: David Attenborough