Financial Crimes – Sumitomo Copper scandal

Commodity Trading பண்றவங்களுக்கு இந்த Scandal  பற்றி கண்டிப்பாக தெரிஞ்சு இருக்கும். காசு , பவர் இருக்குனு கண்ணு மண்ணு தெரியாம ஆடுனா என்ன ஆகும் என்பதை பார்க்கலாம். 

1995 வருஷம் இந்த நிகழ்வு உலகம் முழுவதும் Commodity சந்தையில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Sumo Tomo ஒரு ஜப்பானிய கம்பெனி . இவங்க Commodity Trading பண்ணிட்டு இருந்தாங்க. இதுபோக தனியா Copper division வைச்சு copper trading மற்றும் Physical Copper வாங்கி அவங்க குடோன்ல வைக்கிறது மற்றும் அதை விற்று லாபம் பாக்குறது . இதெல்லாம் போக London Metal Exchange ல Copper Future களிலும் Invest பண்ணிருந்தாங்க. 

இதில் Copper Trading Division Head Trader தான் Yasuo Hamanaka. இந்த கம்பனில Copper சம்பந்தப்பட்ட எந்த முடிவையும் எடுப்பது Hamanka தான். 

இந்த Hamanka Copper Trading பண்றேன்னு எப்படி இந்த கம்பெனிய காலி பண்ணி தெருவுக்கு கொண்டு வந்தானு பார்க்கலாம். 

ஜப்பான் மற்றும் உலகம் முழுவதும் காப்பரை வாங்கி குடோன்ல வைக்கிறார்.

இவரோட கணிப்பு காப்பர் விலை உயரும் என்பது. இப்படியே எக்குத்தப்பாக காப்பரை வாங்கி குவிந்ததால் உலகத்தில் உள்ள காப்பரில் 5% இவனது கட்டுப்பாட்டில் இருந்தது. 

இது எல்லாம் போக LME ல Copper Futures வேற வாங்கி குவிக்கிறது. 

எவனயும் Short Position போக விடுறது இல்லை. காசு இருக்குறதால எவன் Short பண்ணாலும் இவன் நிறைய வாங்கி விலையை ஏத்தி விட்டுட்டு வர்றது. 

Short position physical settlement பண்ண காப்பர் இவன்ட்ட இருந்து தான் வாங்க வேண்டிய கட்டாயம். ஆக மொத்தம் எல்லாம் நல்லபடியாக போக கம்பெனிக்கு செம லாபத்தில் கொழிக்கிறது. 

எல்லாருக்கும் இவன் என்னமோ பண்றானு தெரியுது. ஆனா இவன் எவ்வளவு காப்பர் வைச்சு விளையாடுறானு தெரியல. அந்த டைம்ல இப்ப இருக்கக மாதிரி Exchange கள் டேட்டாக்களை‌ வெளியே விடுவது இல்லை.‌ அதனால  கிட்டத்தட்ட 10 வருஷம் கிங் மாதிரி சுத்திக்கிட்டு செம லாபம் பார்த்துருக்கான். 

எல்லாத்துக்கும் ஒரு முடிவு வேணும் இல்ல. வந்தது ஆப்பு சைனாக்காரன் வடிவில். சைனா Mining industry சூடு பிடிச்சு எக்குத்தப்பாக காப்பர் ஏற்றுமதி ஆகிறது. Supply அதிகரிக்கும் போது எந்த பொருளா இருந்தாலும் விலை குறையுறது வழக்கம் தான.‌ 

காப்பர் விலை குறைய குறைய இங்க Hakanka long position maintain பண்ணுவது செம கஷ்டமாகிறது. இதனால் பேங்கில் கடன் வாங்கி சமாளிக்கிறான். 

ஆனால் விலை குறைய குறைய இவன் பல தில்லாலங்கடி வேலை பார்த்து நஷ்டத்தை மறைக்கிறான் ‌‌.  ஆனால் ஒரு கட்டத்தில் கட்டுக்கடங்காமல் போக 1995 ல் மேட்டர் வெளியே வருகிறது.  இவனுடைய காப்பர் சாம்ராஜ்யம் சரிகிறது. இதனால் கம்பெனிக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு $5 Billion. 

Risk Management சரியா பண்ணலனா என்ன ஆகும் என்பதற்கு சிறந்த உதாரணம் இது. 

English with Full technical terms @zerodha https://zerodha.com/varsity/chapter/copper-aluminium/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

How to add your movie review in IMDbHow to add your movie review in IMDb

உலக சினிமா ரசிகர்களுக்கு IMDb ஒரு சினிமா விக்கிப்பீடியா. திரைப்படங்கள், சீரிஸ்கள், டாக்குமெண்டரிகள் என அனைத்தைப் பற்றியும் விவரங்கள் இதில் கொட்டிக்கிடக்கும்.  தனிப்பட்ட முறையில் ஒரு படத்தை பார்க்க வேண்டுமா ? வேண்டாமா ? என்பதை நான் IMDb வைத்து தான்

Tejas – MDU – Chennai – பயணம்Tejas – MDU – Chennai – பயணம்

Tejas – MDU – Chennai – பயணம் – ஒரு அனுபவம்  தேஜஸ் ட்ரெயின் விட்டது முதல் எப்படியாவது ஒரு தடவையாவது போய்விட வேண்டும் என்பது என்னுடைய ஆசை.   நேத்து தான் ஒரு வழியாக அந்த வாய்ப்பு கிடைத்தது. எனக்கு

Hyundai 10000 – Floating CraneHyundai 10000 – Floating Crane

நேத்து ஒரு வீடியோ பார்த்தேன் . கிரேன் ஒன்னு ஒரு பெரிய கப்பலை தூக்கிட்டு இருக்குற மாதிரி. அந்த கிரேன் கூட தண்ணில ஒரு மிதக்கும் அமைப்பில் இருந்த மாதிரி தெரிந்தது.பாக்கவே பயங்கர பிரம்மாண்டமாக இருந்தது .. சரி இது என்னன்னு