ஒரு சின்ன கிராமத்துல எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஒரு சடலம் கிடைக்கிறது. அதைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை Non – linear முறையில் சொல்லும் படம்.
என்ன ஒரு ரைட்டிங் 🔥
Brilliant 👌
⭐⭐⭐⭐.25/5
Crime, Mystery
Chinese
Tamil ❌
Must Watch !!!

ஒரு சின்ன கிராமம் இருக்கு அதோட தலைவர் மகன் ஒரு பொண்ணை காதலிச்சு கர்ப்பமாக்கிடுறான்.
இருவரும் இதை பற்றி ரகசியமாக சந்தித்து பேசும் போது ஒருத்தன் ஒட்டுக் கேட்டுவிடுகிறான். அதை வைத்து பணம் கேட்டு மிரட்டுகிறான்.

ஒரு எதிர்பாராத சந்தர்ப்பத்தில் மிரட்டியவன் இறந்து விடுகிறான். ஊர் தலைவர் மகன் நம்ம மாட்டிக்கிடுவோம் என்று அந்த பொண்ண கூட்டிட்டு ஊரை விட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறான்.
ஓடிய இருவரும் இது தப்பு என உணர்ந்து சரணடைய ஊருக்கு திரும்புகிறார்கள்.
ஆனால் அங்கே அவர்கள் எதிர்பாராத பல சம்பவங்கள் நடந்து இருக்கிறது
இந்த ஒரு இறப்பு ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பத்தில் சிக்கலை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக ஊருக்குள் வசிக்கும் கள்ளக்காதல் ஜோடி, ஊர் தலைவர் & ஒரு மளிகை கடைக்காரர்.

இவர்கள் வாழ்கையில் நடக்கும் சமப்வங்களை முன்னுக்கு பின்னாக Non Linear முறையில் திறமையாக சொல்லி ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கிறார் இயக்குனர்.
அருமையான ஒரு கதை செல்லும் திறமை இயக்குனக்கு. ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக சென்றாலும் அடுத்து பிக் அப் ஆகிறது கதை.