Netflix ல் வெளிவந்து இருக்கும் Live Action fantasy சீரிஸ் இது.
OTT: Netflix
Episodes: 8
Tamil ✅
Family & Kids ✅✅
Luffy எனும் இளைஞனின் கனவு One Piece எனப்படும் பொக்கிஷத்தை கண்டுபிடித்து கடல் கொள்ளையர்களின் தலைவன் ஆக வேண்டும் என்பது.
இந்த லட்சியத்தை அடைய இவன் மேற்கொள்ளும் Adventure கள் தான் இந்த தொடர்.
இந்த தொடர் மிகவும் பிரபலமான Manga ‘One Piece’ ன் Live action ஆகும்.
அதாவது காமிக்ஸ் கேரக்டர்களுக்கு பதிலாக மனிதர்கள் மற்றும் லொக்கேஷன்களை ரெடி பண்ணி எடுப்பது.
புதையல் வேட்டை கான்செப்ட் எப்பவும் உள்ளது தானே என்று நினைக்கும் போது தான் கேரக்டர்கள் மற்றும் அவர்களின் திறமைகள் ஒவ்வொன்றாக தெரிய வருகிறது.
உதாரணமாக ஹீரோவான Luffy ரப்பர் போல வளையும் தன்மை கொண்டவன், இன்னொரு முக்கிய கேரக்டர் வாள் வீச்சில் வல்லவன், கடல் கொள்ளையர்கள் ஒவ்வொருவரும் ஒரு தனித்துவமான திறமையுடன் வருவார்கள். இது சீரிஸ் பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகிறது.

கதைப்படி தனியாக இந்த புதையல் வேட்டையை ஆரம்பிக்கும் Luffy தன்னுடைய பாஸிட்டிவ் அப்ரோச், விடா முயற்சியுடன் எவ்வாறு தனக்கான குழுவை உருவாக்கினான் என்பதையும் புதையல் வேட்டை பயணங்களை பற்றி சொல்கிறது.

ஒரு சில எபிசோட்கள் இவர்கள் போகும் வழியில் சந்திக்கும் மனிதர்கள் மற்றும் அவர்களுக்கு உதவுவது பற்றியது.
மத்த எபிசோட்கள் எல்லாம் பெரும்பாலும் கடல் கொள்ளையர்களை சுற்றி வருகிறது.
தொடரின் முக்கியமான விஷயம் ஆக்சன் கொஞ்சம் போரடிக்குதே என நினைக்கும் போது ஆக்சன் ப்ளாக் வந்துரும்.

ஹீரோவின் பாஸிடிவ் அப்ரோச் தொடரையே பாஸிடிவ்வாக கொண்டு செல்கிறது.
ஹீரோ மற்றும் அவன் குழுவின் back story ரொம்ப இழுக்காமல் விரைவாக சொல்லி முடிக்கிறார்கள்.

நிறைய சின்ன சின்ன விஷயங்கள் ரொம்பவே நல்லா இருக்கு . குறிப்பாக நத்தை போன் 👌, கோமாளி Pirate, 5 கத்தியுடன் வரும் வில்லன் என நிறைய சொல்லலாம்.

ஒரு சில எபிசோட்கள் கொஞ்சம் ஸ்லோ தான் ஆனால் மொத்தமாக பார்க்கும் போது பெரிதாக தெரியவில்லை.
இன்னும் ஒரு டிராக்கில் கடற்கொள்ளையர்கள் மற்றும் ஹீரோ குரூப்பை பிடிக்க முயற்சி செய்யும் ராணுவம் சம்பந்தப்பட்ட கதை செல்கிறது
கதாபாத்திரங்கள் நல்ல தேர்வு. தேவையான இடத்தில் சென்டிமென்ட் காட்சிகள் உள்ளது
சீரிஸ்ஸின் முதல் சீசனுக்கான பட்ஜெட் $144M. அதாவது (~₹1192 கோடி) .
இந்த பட்ஜெட்டை சிறப்பாக உபயோகித்து இருக்கிறார்கள். கொள்ளையர்களின் கப்பல், அந்த காலகட்டத்தில் இருக்கும் நகரங்கள் என செம பிரம்மாண்டம்.
ஒரே ஒரு காட்சி தவிர (Man backside )தொடர் முழுவதும் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.
தமிழ் டப் ரொம்பவே நல்லா இருக்கு 👍.
என்னுடைய கணிப்பு சரியாக இருந்தால் Wednesday க்கு அப்புறம் Netflix ல் நிறைய ரெக்கார்டுகளை உடைக்க போகும் சீரிஸ் இதுவாக தான் இருக்கும்.
Netflix கண்டிப்பாக 2 வது சீசன் renew பண்ணுவான்.