ரிவ்யூ படிக்கும் முன்பாக இந்த படத்தின் டிரைலர் மற்றும் சில விபரங்கள்.
Review
கம்பெனியில் வேலை அழுத்தம் காரணமாக தற்கொலை வரைக்கும் போன ஒருவனின் வாழ்க்கையில் குறுக்கே வரும் ஜோம்பி பேரழிவு.
⭐⭐⭐/5
Language: Japanese @netflix
Tamil ❌
கஷ்டப்பட்டு படிச்சு பிடிச்ச கம்பெனியில் வேலைக்கு சேரும் இளைஞன். ஆனால் கம்பெனி இவனை கொத்தடிமை மாதிரி வேலை வாங்குது. குறிப்பாக இவனுடைய லீட் கொடுமை படுத்துகிறான்.

இந்த சூழ்நிலையில் ஜாம்பி தாக்குதல் ஆரம்பிக்கிறது. ஆனால் அவன் இருக்கும் மனநிலையில் ஆபீஸ் போக வேண்டாம் நமக்கு பிடித்த விஷயங்களை செய்யலாம் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது.

தான் ஜோம்பியாக மாறும் முன்பு செய்ய வேண்டும் என விரும்பும் 100 விஷயங்கள் என லிஸ்ட் போட்டு அதன்படி நடக்க ஆரம்பிக்கிறான்.
இந்த பயணத்தில் அவனுடைய நெருங்கிய நண்பன் இணைந்து கொள்கிறான்.

இவர்கள் இருவரும் பயணத்தில் ஒரு பெண்ணை காப்பாற்றுகிறார்கள் . அந்த பெண் இவர்களுடன் வேறு வழியில்லாமல் பயணித்தாலும் போக போக இவர்களை பற்றி தெரிந்து கொண்டு இந்த பயணத்தில் ஐக்கியமாகிறாள்.

ஹீரோ தன்னுடைய ஒரு முக்கியமான குறிக்கோளுக்காக அக்வாரியம் ஒன்றிற்கு போகிறார்கள்.
அங்கே பார்த்தால் ஹீரோவை ஆபீசில் கொடுமை படுத்திய லீட் அங்கே இருக்கிறான்.

அங்கும் ஜோம்பி தாக்குதல் நடக்கிறது அதிலிருந்து எப்படி தப்புகிறார்கள் என்பது தான் படம்.
படம் மூன்று டிராக்கில் இருக்கிறது. முதலில் ஹீரோ மற்றும் அவனது பிரச்சினைகள். அடுத்ததாக இவர்களின் சாலை பயணம். கடைசியாக அக்வாரியத்தில் க்ளைமாக்ஸ்.

படத்தின் முக்கிய விஷயம் என்னவென்றால் பாஸிட்டிவிட்டி. ரொம்ப ரத்தம் இருட்டு என்று போகாமல் நிறைய இடங்களில் நல்ல கலர்புல்லாக , நல்ல இசையுடனான காட்சிகள் உள்ளது.
ஜாம்பி பட ரசிகர்களுக்கு பல படங்கள் கண்டிப்பாக மனதில் வந்து போகும்.
இதில் வரும் ஜாம்பி சுறா மீன் அருமை. வித்தியாசமா யோசிச்சு இருக்காங்க.

படம் ஆங்காங்கே கொஞ்சம் ஸ்லோவா போனாலும் கண்டிப்பா பாக்கலாம் 👍