முதல் பாகத்தை (Into the Spider-verse) பார்த்துட்டு இதை பார்த்தா தான் புரியும். ஸ்பைடர்மேன் செய்த ஒரு சின்ன தவறால் வில்லன் உருவாகிறான்.
⭐⭐⭐.5/5
அவனை அழிக்க இந்த பாகத்தில் ஸ்பைடர் மேன் பல யுனிவர்ஸ்க்குள் சென்று வருகிறார். கடைசியில் அவனை அழித்தாரா என்பதை காட்டாமல் ஒரு ட்விஸ்ட் வச்சு அடுத்த பாகமான ‘Beyond Spider-verse படத்திற்கு லீட் கொடுத்து முடியுது படம்.

படத்தின் டெக்னிகல் சமாச்சாரங்கள் உச்சம். ஒவ்வொரு ப்ரேமையும் கலர் கலராக செதுக்கி இருக்கிறார்கள்.
பல வகையான ஸ்பைடர்மேன்கள் வருகிறார்கள். இந்தியா வெர்ஷன் ஸ்பைடர்மேன் கூட இருக்காரு.பல சிக்கலான கான்செப்ட்டுகள் கொண்டு இருப்பதால் கொஞ்சம் கவனமாக பார்க்க வேண்டும்.

மற்றபடி நம்ம மக்கள் எல்லாருக்கும் பிடிக்குமா என்பது சந்தேகமே…முதல் பாகம் அளவுக்கு ஸ்பீடாக போகவில்லை என்பது என்னுடைய கருத்து.
கண்டிப்பாக பார்க்கலாம். ஒரு புது அனுபவமாக இருக்கும்.