Rikki’s Restaurant – Palavakkam – Review

Rikki’s Restaurant – Palavakkam – Review post thumbnail image

பல வருஷமா பீச் பக்கத்துல இருக்குற இந்த கடைக்கு போகணும்னு நினைத்தது உண்டு. நேத்து தான் வாய்ப்பு கிடைத்தது. வொர்த்தானு பாக்கலாம்.

Food ⭐⭐⭐.5
Ambience ⭐⭐⭐
Sevice ⭐⭐
Price – OK

Cuisine: Chinese,Sichuan, Tibetan,Momos

இந்த கடைல AC Hall கிடையாது. உள்ள சும்மா தக தகனு இருந்தது அதுனால கெளம்பலாம்னு பார்த்தா Roof Top இருக்குனு சொன்னானுக. அதுனால அங்க போயாச்சு. அதுவும் அவ்வளவு சுத்தமா இல்லை. மொத்தமா மரத்துல ஷோபா , டேபிள் போட்டு வச்சு இருந்தானுக. என் பையன் மாடில தான் சாப்பிடனும்னு ஒரே அடம். அதனால அங்கேயே உக்காந்தாச்சு.

Rikki’s Roof Top Restaurant

சர்வீஸ் ரொம்பவே ஸ்லோ. என்ன கேள்வி கேட்டாலும் வாய்க்குள்ளயே ஹிந்தில ஏதோ சொல்றான். நேத்து க்ளைமேட் வேற சரியில்ல எனக்கு வேர்த்து ஊத்துது கொஞ்சம் Pedastal Fan போட்டு விடுடானு சொன்னா அதுக்கும் என்னத்தயோ வாய்க்குள்ள சொல்லிட்டே போறான். 2 தடவ கேட்டும் Fan போடல.

மொதல்ல Chicken Tom Yum Soup , Tandoori Chicken Momo & Hot Thai Chicken சொன்னேன்.

Chicken Tom Yum Soup . செம காரம் .. ஏதோ ஒரு Sauce கொஞ்சம் அதிகமா ஊத்திட்டானுகனு நெனைக்கிறேன். ஆனா நல்லா தான் இருந்தது
Chicken Tandoori Momos : இந்த Momo ஐட்டங்களை நான் சாப்பிட்டதே இல்ல. ஆனா இது ரொம்பவே டேஸ்ட்டா
இருந்தது. கண்டிப்பா டிரை பண்ண வேண்டிய ஐட்டம்.
Hot Thai Chicken – இந்த ஐட்டம் பார்க்கவே நல்லா இருந்தது. சின்னதா கடலைப் பருப்பை வறுத்து போட்டு இருக்கானுக. அது ஒரு வித்தியாசமான Flavour கொடுத்தது. ஆனா சிக்கன் ரொம்ப Hard’a இருந்தது. டேஸ்ட் செம. பேருக்கு ஏத்த மாதிரி செம காரம்‌.
Panneer Fried Rice – பசங்களுக்காக காரம் இல்லாமல் போட்டு கொடுக்க சொன்னது. நல்லா இருந்தது.
Chicken Ramen – வித்தியாசமான ஒரு நூடுல்ஸ் ஐட்டம். சூப் தனியா, சிக்கன், முட்டை, கடலைப்பருப்பு இன்னும் சில ஐட்டங்களை நூடுல்ஸ் மேல போட்டு கொடுத்தானுக. கடைசியா எப்படி சாப்பிடனும்னு கூகுள் பண்ண வேண்டியது ஆகிடுச்சு.
Choclate Momos – எனக்கு இத ஆர்டர் பண்ணவே பிடிக்கல. ஆனா பசங்க நல்லா விரும்பி சாப்பிட்டானுக.

ஆக மொத்தம் டேஸ்ட் எல்லாம் நல்லா தான் இருக்கு. சர்வீஸ் & இடம் சரியில்லை.

My Favourite Bluetooth headset under 2K

கொஞ்சம் வித்தியாசமான டேஸ்ட்டல சாப்பிடனும்னு விரும்பினா கண்டிப்பாக டிரை பண்ணலாம்.

மேலே சொன்ன ஐட்டங்கள் எல்லாம் சேர்த்து 1400 ரூபாய் பில் வந்தது. எனக்கு வொர்த்தா தான் தெரிந்தது.

My Kid’s Favourite Time Pass

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Who is Oppenheimer ?Who is Oppenheimer ?

 “Oppenheimer” இந்த படம் நேற்று வந்த சில போஸ்டர்களால் சினிமா ரசிகர்கள் இடையே பரபரப்பாக பேசப்படுகிறது.  Oppenheimer – என்றால் என்ன?  J. Robert Oppenheimer என்பவரின் பெயரோட சுருக்கம் தான் “Oppenheimer”  யாரு இந்த  J. Robert Oppenheimer ? 

Google Photos Tips – ஆண்ட்ராய்டில் Cloud Sync செய்வது எப்படி ?Google Photos Tips – ஆண்ட்ராய்டில் Cloud Sync செய்வது எப்படி ?

கொஞ்ச நாளைக்கு முன்னாடி நண்பர் ஒருவர் Phone / Memory card ல் உள்ள போட்டோஸ் எப்படி Cloud ல் Sync பண்ணணும்னு கேட்டார். நிறைய பேருக்கு இது தெரிஞ்சு இருக்கும் தெரியாதவங்க தெரிந்து கொண்டு யூஸ் பண்ணிக்கோங்க.  Maximum நீங்க

My Favourite Trip- parambikulam, Thunakkadavu Tree HouseMy Favourite Trip- parambikulam, Thunakkadavu Tree House

My Favourite Trip- parambikulam, Thunakkadavu Tree House & Tree Top Stay சில சுற்றுலா பயணங்கள் மறக்க முடியாதபடி அமையும் . அது மட்டுமல்லாமல் மீண்டும் போக வேண்டும் என்ற ஒரு ஆவலைத் தூண்டும். 2017 மார்ச் மாதத்தில்