போர் தொழில் தமிழ் ரிவ்யூ
⭐⭐⭐⭐.75
SonyLiv ல இருக்கு.
தமிழில் ரொம்ப நாளைக்கு அப்புறமா சீரியல் கில்லர் & போலீஸ் இன்வெஸ்டிகேஷன் பத்தின ஒரு சிறப்பான படம்.
கண்டிப்பாக பார்க்கலாம்.
உருக்கு வெளியே ஒரு பெண் மர்மமாக கொடூரமான முறையில் கொல்லப்பட்டு கிடப்பதுடன் படம் ஆரம்பிக்கிறது.
இதன் பின்னர் இதே மாதிரி கொலைகள் தொடர்வதால் ஸ்பெஷலாக இரண்டு அதிகாரிகளை நியமிக்கிறது காவல்துறை .
இவர்கள் இருவரும் இது சைக்கோ கொலையாளி வேலை என்பதை கண்டுபிடிக்கிறார்கள் . இதற்கு பிண்ணணியில் உள்ளவன் யார் என்பதை கண்டுபிடித்தார்களா என்பதை படத்தில் பாருங்கள்.
படத்தின் திரைக்கதையில் இயக்குநரின் உழைப்பு தெரிகிறது. உதாரணமாக பிணத்தின் உடலில் உள்ள வெப்பத்தை கணக்கிடும் காட்சி.
இதே போல தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கத்தியை எப்படி எடுக்க வேண்டும் என்று ஒரு காட்சி வைத்து இருப்பார் இயக்குனர் வினோத்.
சஸ்பென்ஸ் எப்படி உருவாக்க வேண்டும் என்பதை தெளிவாக தெரிந்து வைத்து இருக்கிறார் இயக்குனர்.
குறிப்பாக கொலையாளி என்று சந்தேகப்பட்டு ஒருவனை ரயில்வே கேட்டில் விசாரிக்கும் காட்சி அருமை. குறிப்பாக அந்த காட்சியில் சைலண்டாக விட்டு விட்டு ரயில் சத்தத்தை வச்சு கெளப்பிருப்பாங்க.
போலீஸ் ஆபீசர் வந்தாரு விசாரிச்சாரு என்று இருந்தால் கூட சாதரணமாக போய் இருக்கும்.
இரண்டு எதிர்மறை வயது மற்றும் குணாதிசயங்கள் கொண்ட போலீஸ் கதாபாத்திரங்கள் நல்ல ஐடியா.
நடிகர்கள் தேர்வு மற்றும் நடிப்பு கச்சிதம்.
அசோக் செல்வன் பயந்த போலீசாக நல்ல ரோல்.
சீனியர் போலீஸ் ரோலில் சரத்குமார் கச்சிதம். ரொம்ப நாளாக ஆகிவிட்டது சரத்குமாரை இது போன்ற ஒரு நல்ல ரோலில் பார்த்து.
இன்னொரு சீனியர் நடிகர் நம்ம எதிர்பார்க்காத ஒரு ரோல் பண்ணி இருக்கார். அவரை பத்தி பேசுனா ஸ்பாய்லர் ஆகிடும்.
ஹீரோயின் வேண்டுமே என்று வைக்காமல் படத்திற்கு தேவையான இடத்தில் அழகாக பொருந்தி இருக்கிறார் நிகிலா விமல். அதிலும் கடைசியில் இவரை மையமாக வரும் காட்சிகள் எதிர்பாராதது.
காதல் காட்சிகள் மற்றும் பாடல்கள் வைக்காமல் இந்த படத்தை எடுத்ததற்கு தனியாக இயக்குனரை பாராட்டலாம்.
போனை கேட்ச் பிடிப்பது, ஜீப் ஸ்டார்ட் பண்ணாமல் போவது போன்றவற்றை எல்லாம் பிற்பகுதியில் தேவையான இடத்தில் சரியாக உபயோகித்து இருக்கிறார்.
பயந்த சுபாவம் கொண்ட ஹீரோவுக்கு வரும் மாஸ் சீன் எப்படி இருக்கும் என்பதை க்ளைமேக்ஸ் துப்பாக்கியை வைச்சு அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
எத்தனையோ படங்கள் பார்த்து இருந்தாலும் ஹாலிவுட்டில் Se7en படம் தந்த ஒரு தாக்கத்தை வேறு எந்த சைக்கோ கில்லர் படங்களும் இதுவரை தந்தது இல்லை.
அது போல ராட்சசன் படம் சைக்கோ கில்லர் படங்களுக்கு ஒரு Bench Mark செட் பண்ணிவிட்டது.
அதனால் இனிமே தமிழில் சைக்கோ கில்லர் படங்கள் வந்தால் அந்த படத்துடன் ஒப்பீடு செய்வது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.
அதனால் முடிந்தவரை இரண்டு படங்களையும் கம்ப்பேர் பண்ணாமல் தனித்தனியாக பார்த்து ரசிப்பது சினிமாவுக்கு நல்லது. அப்படி வந்தாலும் அதை ஒதுக்கி வைத்து விட்டு படத்தை என்ஜாய் பண்ணுங்க.