நல்ல ஒரு Sci Fi, Sattire , Mystery காமெடி படம். ஒரு Drug டீலர் கொல்லப்படுறான்.
அடுத்த நாள் உயிரோட வர்றான். எப்படி? பிண்ணணியில் உள்ளவர்கள் யார்?
இதை காமெடி கலத்து சொல்லிருக்காங்க.
⭐⭐⭐.75/5
Tamil ✅ @netflix
ஒரு drug dealer ன் தினசரி நடவடிக்கைகள் காட்டப்படுகிறது.
அவனுக்காக வேலை பார்க்கும் ஒரு புரோக்கர் & அவனிடம் பாலியல் தெழிலாளி ஒரு பெண் என மூன்று முக்கிய பாத்திரங்கள்.
கருப்பினத்தை சேர்ந்த இந்த மூவரும் Glen எனும் ஊரில் வசிக்கிறார்கள் .ஒரு நாள் Drug dealer மர்ம நபர்களால் சுடப்பட்டு கொல்லப்படுகிறான். இதனை புரோக்கர் & கூட உள்ள பெண் பார்க்கின்றனர்.

அடுத்த நாள் அவன் உயிரோடு வருவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். மீண்டு வந்தவனுக்கு நீ நேத்து சொத்துட்டடா என புரிய வைத்து அதன் பிறகு மூவரும் சேர்ந்து இது எப்படி சாத்தியம் என்பதை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார்கள்.
இதில் பல அதிர்ச்சிகரமான உண்மைகளை கண்டு பிடிக்கிறார்கள். அது என்ன இதற்கு பிண்ணணியில் உள்ளவர்கள் யார்? எதுக்கு இவ்வாறு பண்ணுகிறார்கள் என்பதை படத்தில் பாருங்கள்.

படத்தின் கதை சீரியஸாக இருந்தாலும் படத்தின் செட்டப் , பிண்ணணி இசை, பிண்ணணியில் பாடல்கள், நகைச்சுவை என ஜாலியாகவே போகிறது.
படத்தின் ஆரம்பம் கொஞ்சம் மெதுவாக இருந்தாலும் கொலை நடத்த பிறகு வேகம் எடுக்கிறது.
எப்படி உயிரோடு வந்தான் என்பதை பாதி படத்திற்கு மேல் மெயின்டெய்ன் பண்ணுவதால் நன்றாகவே போது படம்.
Drug Dealer ஆக Fontaine எனும் ரோலில் John Boyega சிறப்பாக நடித்து உள்ளார்.

Pimp ரோலில் Slick Charles ஆக நம்ம Jamie Foxx எப்பவும் போல கலக்கல்.

பாலியல் தொழிலாளியாக இருவருக்கும் அட்வைஸ் கொடுக்கும் Yo Yo ரோலில் Teyonah Parris சிறப்பு.

ஆக மொத்தம் கருப்பின மக்களை அமெரிக்கா நடத்தும் விதத்தை சொல்லும் ஒரு நைய்யான்டி படம்.கண்டிப்பாக பார்க்கலாம் 👍