Henry Cavill – விட்சராக நடிக்கும் கடைசி சீசன் 2 பாகங்களாக வெளிவருகிறது.
Total Episodes – 5, Available in Netflix, Tamil✅ ⭐⭐⭐/5
Read S1 & S2 Review before S3
Season 3 Review
நல்ல ஆரம்பம் ஆனா பின்னாடி ஸ்லோவா ஆகிடுச்சு.
இந்த சீசனிலும் வழக்கம் போல Geralt, Yen & Ciri யை சுத்தி தான் நகர்கிறது. மூவரும் தீய சக்திகளிடம் இருந்து தப்பித்து ஊர் ஊராக சென்று ஒரே குடும்பமாக மகிழ்ச்சியாக மறைந்து வாழ்கின்றனர்.

ஒரு கட்டத்தில் மந்திரவாதிகளின் புகலிடம் மற்றும் Yen மந்திரம் கற்றுத் தேர்ந்த இடத்தில் உதவி கிடைக்கும் என அங்கு போகின்றார்கள்.

இதற்கு நடுவில் அந்த கண்டத்தில் இருக்கும் பல அரசர்கள், Elves மற்றும் மந்திரவாதிகள் பலர் சிரியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மந்திரம் மற்றும் அரசியல் விளையாட்டு விளையாடுகிறார்கள்.

முதல் எபிசோட் சூப்பராக ஆரம்பித்தது ஆனால் போக போக ரொம்பவே ஸ்லோ ஆகிடுச்சு. இதுல பாட்டு வேற அப்ப அப்ப.
Less Action , More Politics
குறிப்பாக கடைசி எபிசோட் சொல்லப்பட்ட விதம் சுத்தமா எனக்கு பிடிக்கல. புதுசா எடுக்குறேனு வந்த சீனே மறுபடியும் வருது. மற்றபடி கொடூரமான விலங்குகள் வேட்டை 3 இருக்குது,
நடிப்பு , லொக்கேஷன்கள் மற்றும் அனைத்து டெக்னிகல் சமாச்சாரங்களும் Top Notch.
The Witcher fans கண்டிப்பாக பார்க்கலாம்.
Season 3 Part 2 இதை விட நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன்.
உங்களுக்கு தெரியுமா?
நான்காவது சீசனில் இருந்து Henry Cavill க்கு பதிலாக Liam Hemsworth விட்சராக நடிப்பார்.
