Sound Of Freedom – Surprise hit

Sound Of Freedom – Surprise hit post thumbnail image

நம்ம Person of interest புகழ் Jim Caviezel நடிச்சு சத்தமே இல்லாம $100M மேல பாக்ஸ் ஆபிஸ் வசூல் பண்ணி ஓடிட்டு இருக்குற படத்தை பற்றிய தகவல்கள்.

Jim Caviezel

July 4 ஆம் தேதி ரிலீஸான இந்த படம் வெளியான 3 வாரத்தில் உள்ளூரில் மட்டும் $130M வசூல் பண்ணி இருக்கு.

இது எந்த அளவுக்கு பெரிய வசூல் என்றால்.. பெரிய படங்களான

Scream VI ($108 million)
The Flash ($107 million)
M3GAN ($95 million)
Dungeons & Dragons: Honor Among Thieves ($93 million)

போன்றவற்றின் உள்ளூரின் மொத்த வசூலை தாண்டி போய்ட்டு இருக்கு. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த படத்தின் பட்ஜெட் மொத்தமே $14M தான்.

இதற்கு பின்பு வெளியான Mission impossible dead reckoning படத்தை போன வாரம் வசூலில் முந்தி 3 வது இடத்தை பிடித்தது.

இனிமே தான் அமெரிக்கா தாண்டி உலக அளவில் வெளியாகும் என்பதால் வசூல் இன்னும் அதிகரிக்கும்.

என்ன தான் இந்த படம் வசூலில் சாதிச்சாலும் இப்ப இந்த படத்தை சுத்தி நடக்கும் பிரச்சினைகளை பார்ப்போம்.

இந்த படம் அமெரிக்காவின் Home land security பிரிவில் வேலை பார்த்த Tim Ballard என்பவரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது. இவர் பாலியல் தெழிலுக்காக கடத்தப்படும் குழந்தைகளை காப்பாற்றுவதை லட்சியமாக கொண்டவர்‌ .

இந்த படத்தில் QAnon தியரி உண்மை என்பது போல வருகிறது போல. ஹீரோவும் இந்த தியரி பற்றி பேசி இருக்கிறார்.

இந்த தியரி என்ன சொல்லுதுனா:

ஒரு மர்மமான அமைப்பு ஒரு பெரிய நெட்வொர்க் வைச்சு குழந்தைகள் கடத்தலில் ஈடுபடுகிறது. இந்த அமைப்பு முன்னாள் US President Donald Trump க்கு எதிராக சதி செய்கிறது என்றும் கூறுகிறது.

இதனால் தான் வலது சாரிகளின் ஆதரவு கூடுதலாக உள்ளது.

பெரிய பெரிய பட்ஜெட் படம் எல்லாம் ஒரு மேட்டரே இல்ல கன்டென்ட் தான் முக்கியம் என்பதை அப்ப அப்ப இந்த மாதிரி படங்கள் வந்து அதை உறுதி செய்யும்.

Key to the film’s success has been its embrace by right-wing media personalities and social media users.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

John Wick 5 Still possible?John Wick 5 Still possible?

John Wick 4 பட டைரக்டர் Chad Stahelsk ரீசன்டா ஒரு இன்டர்வியூல John Wick 4 படத்தோட க்ளைமேக்ஸ் பத்தி பேசி இருக்காரு. படத்துக்கு இரண்டு விதமான க்ளைமேக்ஸ் வச்சு இருந்தார்களாம். 1. படத்துல வந்த க்ளைமேக்ஸ். ஜான் விக்

PROJECT – K in the prestigious San Diego Comic-con festivalPROJECT – K in the prestigious San Diego Comic-con festival

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் Sci Fi படம் தான் Project K. SDCC நிகழ்ச்சியில் Project K குழு கலந்து கொள்கிறது. SDCC ஹாலிவுட்டில் பிரபலமான

Barbie – Oppenheimer – Box Office ReportBarbie – Oppenheimer – Box Office Report

Barbenheimer - Box office report Barbie, Oppenheimer இரண்டு படங்களும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்தது. வெளிவந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆன நிலையில் இந்த படங்களின் வசூல் பற்றிய ஒரு ரிப்போர்ட்.