SAG-AFTRA, WGA – போராட்டமும், ஸ்தம்பித்த ஹாலிவுட்டும்

SAG-AFTRA, WGA – போராட்டமும், ஸ்தம்பித்த ஹாலிவுட்டும் post thumbnail image

போராட்டம் அறிவித்த உடன் Oppenheimer குழு ப்ரோமசன் நிகழ்ச்சில இருந்து பாதிலயே கிளம்பிட்டாங்க .

இதை பற்றி ஒரு விரிவான அலசல்.

பட தயாரிப்பாளர்கள் யூனியனுக்கும், நடிகர்கள் மற்றும் இதர கலைஞர்கள் யூனியனுக்கும் சில ஒப்பந்தங்கள் எட்டப்படாத காரணத்தால் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

முதலில் இதில் எந்த எந்த யூனியன் இருக்குனு பாக்கலாம்.

The Screen Actors Guild-American Federation of Television and Radio Artists (SAG-AFTRA)

இந்த யூனியன்ல கிட்டத்தட்ட 160,000 actors, broadcast journalists, announcers, hosts, stunt performers, and other media professionals உறுப்பினர்களாக இருக்காங்க.

Alliance of Motion Picture and Television Producers (AMPTP)

இந்த யூனியன்ல தயாரிப்பு நிறுவனங்கள், ஸ்டூடியோக்கள், OTT நிறுவனங்கள் (Paramount, Disney, and Netflix) போன்றவை உறுப்பினர்களாக உள்ளனர்.

எதுக்கு இந்த போராட்டம்?

இப்ப OTT , AI புரட்சி போன்றவற்றால் மிரண்டு போன தொழிலாளர்கள் மற்றும் கலைஞர்கள் நல்ல சம்பளம், சிறப்பான வேலை பார்க்கும் சூழல் போன்றவற்றை தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனை நிறைவேற்ற June 30 வரை கெடு வைத்து இருந்த நிலையில் முடிவு எட்டப்படாமல் July 12 நள்ளிரவு வரை இந்த கெடு ஒத்தி வைக்கப்பட்டது.

65,000 உறுப்பினர்களிடையே July 12 முடிவு எட்டப்படவில்லை என்றால் வேலை நிறுத்தத்தை அறிவிக்கலாமா என்ற ஓட்டெடுப்பில் 98% ஆமாம் என்று சொல்லி இருந்தனர்.

இந்நிலையில் இரண்டு தரப்பு பேச்சு வார்த்தையில் ஒரு முடிவும் எட்டப்படவில்லை என்பதால் SAG-ASTRA வேலை நிறுத்தத்தை அறிவித்தது.

இதனால் என்ன நடக்கும்?

எந்த படப்பிடிப்பும் நடைபெறாது.
நடிகர்கள் மற்றும் நடிகைகள் படத்தை விளம்பரப்படுத்தும் ப்ரமோ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது.

சோசியல் மீடியாக்களிலும் உட்பட எந்த வகையிலும் இவர்கள் படத்தை ப்ரமோட் பண்ணுவது தடை செய்யப்பட்டுள்ளது.

Oppenheimer ப்ரமோ நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்த நேரம் இந்த கெடு முடிவடைந்தது. ஏற்கனவே இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள
Cillian Murphy, Emily Blunt, and Florence Pugh ஆகியோர் பாதியிலேயே வெளியேறினார்கள்.

WGA – Writers Guild of America வேலை நிறுத்தம் என்னாச்சு?

திரைக்கதை எழுத்தாளர்கள் ஏற்கனவே கடந்த மூன்று மாதங்களாக வேலை நிறுத்த போராட்டம் செய்து கொண்டு உள்ளார்கள்.

இவர்களும் நல்ல சம்பளம் மற்றும் திரைக்கதை எழுதுவதில் AI பயன்படுத்த கூடாது என்பதை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்து வந்தனர்.

இவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக Stranger Things போன்ற பல தொடர்கள் ரிலீஸ் தேதிகள் தள்ளி வைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

இரு முனைத் தாக்குதல்

இவ்வாறாக இரண்டு யூனியன்களும் சேர்ந்து தயாரிப்பாளர்கள் கூட்டணிக்கு எதிராக இரு முனைத் தாக்குதல் தொடங்கி உள்ளதால் பாதிப்பு பெரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு பிறகு இரண்டு யூனியன்களும் ஒரே நேரத்தில் ஈடுபட்டு உள்ளன.

ஏற்கனவே பல தொடர்கள் மற்றும் படங்களின் படப்பிடிப்பு வேலைகள் நிறுத்தம் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

அடுத்த கட்டமாக போராட்டக்காரர்கள் பதாகைகளை பிடித்த தெருவில் இறங்கி போராட தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள்.

இரு தரப்பினரும் பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமான ஒரு முடிவு எடுக்கும் வரை படங்கள் மற்றும் தொடர்களின் படப்பிடிப்பு கண்டிப்பாக பாதிக்கப்படும்.

சீக்கிரமாக இந்த பிரச்சினையில் சுமூகமான தீர்வு எட்டப்பட வேண்டும் என்பது ஹாலிவுட் ரசிகர்களின்‌ விருப்பமாக உள்ளது.

Project K in SDCC – பாதிக்கப்படுமா ?

இது என்னனு சரியாக தெரியவில்லை என்றால் இந்த போஸ்ட்டை படித்த பின் தொடரவும்.

PROJECT – K IN SDCC

இந்த போராட்டத்தால் Project K படத்திற்க்கு பாதிப்பு இருக்கு ஆனா இல்லை என்ற ரேஞ்சுக்கு தான் இருக்கு.

பொதுவா இந்த SDCC படங்களை விளம்பர படுத்தவே நடத்தப்படுகிறது. யூனியன்கள் சட்டப்படி நடிகர்கள், நடிகைகள் கலந்து கொள்ள மாட்டார்கள். இவ்வாறு நிறைய பேர் விலகும் பட்சத்தில் நிகழ்ச்சி பொலிவிழந்து காணப்படும் இல்லை என்றால் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

பிரபாஸ்,, கமல், தீபிகா இந்த யூனியனில் இல்லாததால் கலந்து கொள்வதில் பிரச்சினை இருக்காது.

ஆனால் எதிர்பார்த்த அளவு படத்திற்கான விளம்பரம் கிடைப்பது சந்தேகமே.

இன்னும் விரிவான தகவல்கள் ஆங்கிலத்தில்:

https://www.harpersbazaar.com/culture/politics/a44506329/sag-aftra-actors-strike-hollywood-explained/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Zom 100: Bucket List of the Dead – Trailer UpdateZom 100: Bucket List of the Dead – Trailer Update

Zom 100: Bucket List of the Dead – புது ஜப்பான் ஜாம்பி பட டிரைலர் Netflix நிறுவனம் August 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் ஜப்பானிய Zombie படத்திற்கான டிரைலரை வெளியிட்டு இருக்கிறது.  2018 ல் வெளிவந்த

PROJECT – K in the prestigious San Diego Comic-con festivalPROJECT – K in the prestigious San Diego Comic-con festival

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் Sci Fi படம் தான் Project K. SDCC நிகழ்ச்சியில் Project K குழு கலந்து கொள்கிறது. SDCC ஹாலிவுட்டில் பிரபலமான