Secret invasion – Ep 1
Marvel universe ல (MCU) இருந்து புதுசா வந்து இருக்கும் தொடர் தான் இது.
தொடர் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.
Skrulls எனும் ஏலியன்கள் பூமியில் வசிக்கிறார்கள். இவர்கள் நினைத்த நேரத்தில் நினைத்த உருவத்திற்கு மாறும் வல்லமை கொண்டவர்கள்.
இவர்களில் ஒரு குரூப் புரட்சி மோடுக்கு மாறி மனுசங்களை கொன்னுட்டு பூமியை சொந்தம் கொண்டாட ப்ளான் பண்றாங்க.
இத தடுக்க Nick Fury வர்றாரு.
இந்த எபிசோட்ல பிரச்சினை என்னனா பிண்ணனி கதை எதுவும் புரியலை. ஒரு வேளை MCU படங்கள், தொடர்களை உன்னிப்பாக பின் தொடர்ந்தால் புரியுமா என்னனு தெரியல.
இப்பவே நல்லா இருக்கா இல்லையான்னு சொல்றது கஷ்டம். வெயிட் பண்ணி பார்ப்போம்.
Secret Invasion – Ep 2:
முதல் எபிசோட் முடிந்த இடத்தில் இந்த எபிசோட் தொடங்குது. இதுல Skrulls பத்தின பிண்ணணியும், Nick Fury இதுல எப்படி இன்வால்வ் ஆகுறாருனு கொஞ்சம் சொல்றாங்க.
Skrulls plan பத்தி கொஞ்சம் சொல்லப்படுகிறது.
மத்தபடி பரபரப்பாகவோ எங்கேஜிங்காகவோ இல்ல.
Emilia Clarke & Samuel Jackson ரெண்டு பேருக்கும் பெருசா ஒன்னும் வேலை இல்லை. வர்றாங்க, பேசுறாங்க , போறாங்க.
மொத்தம் 6 எபிசோட்ல 2 முடிஞ்சது. அடுத்த எபிசோட் இதே மாதிரி விட்டுட்டு இருந்தா தேறுவது கஷ்டம் தான்.