பூமியை கைப்பற்ற வரும் ஏலியன்கள் பற்றிய கதையை உலகத்தின் வேறு வேறு பகுதிகளில் இருக்கும் சில நபர்களின் பார்வையில் சொல்லும் தொடர்.
Genre: Sci Fi, Drama
My Rating: ⭐⭐⭐⭐/5
Tamil Sub ✅
10 Episodes, Available in Apple TV+
ஏலியன்கள், ஆக்சன் கொஞ்சம், டிராமா அதிகம்.
கண்டிப்பா பாக்கலாம்.

தொடர் எடுத்த உடனே ஏலியன்கள், சண்டை போர் என்று போகாமல். உலகத்தில் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் சிலரின் வாழ்க்கையை காட்டுகிறது.
லண்டனில் வசிக்கும் சிறுவன். இவனுக்கு திடீரென வலிப்பு வருகிறது அந்த நேரத்தில் ஏலியன்கள் பற்றி தெரிகிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள அமெரிக்க படை வீரனை பற்றிய கதை மற்றொரு டிராக்கில் செல்கிறது. இவன் தன்னுடைய படையை விட்டு பிரிந்து விட மறுபடியும் சேர் முயற்சி செய்கிறான்.

ஜப்பானில் உள்ள தகவல் தொடர்பு நிபுணரான ஒரு பெண்ணின் கதை சொல்லப்படுகிறது. ஒரே பாலினத்தை சேர்ந்த தன்னுடைய இணையை விண்வெளி விபத்தில் இறந்து விட்டார் என்பதால் மனமுடைந்து போகிறார்.

அடுத்ததாக தன்னுடைய கணவனின் கள்ளத்தொடர்பை கண்டுபிடித்த இரண்டு குழந்தைகளின் அம்மாவான பெண்ணை சுற்றி நகர்கிறது.


சீரிஸ் ரொம்ப பரபரப்பாக எல்லாம் போகாது. Character development க்காக ரொம்ப நேரம் எடுத்துக் கொள்கிறார்கள்.
ஏலியன்கள் ஆக்கிரமிப்பு பற்றி ஆரம்பத்தில் இருந்து நகர்ந்தாலும் 5வது எபிசோட்களுக்கு மேல தான் ஏலியன்கள் அறிமுகம் ஆகிறது.
குறிப்பாக ஒரு குடும்பம் ஏலியன்கள்ளிடம் இருந்து தப்பிக்கும் எப்சோட் நல்லா இருந்தது. ஏலியன்கள் வந்த பிறகு கொஞ்சம் வேகம் எடுக்கிறது.
எனக்கு தெரிஞ்சு எல்லாருக்கும் பிடிக்க வாய்ப்பு இல்லை. ஆனால் தரமான சம்பவங்கள் இனிமேல் தான் இருக்கு என்று நினைக்கிறேன். அதற்கான செட்டப் தான் சீசன் 1 ஆக இருக்கலாம்.
இதற்கு தகுந்தாற்போல் சமீபத்தில் வெளிவந்த சீசன் 3 டிரைய்லர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அதிரடியாக இருந்தது.
Invasion Season 2 – First look images & Trailer







