Barbie – Oppenheimer – Box Office Report

Barbie – Oppenheimer – Box Office Report post thumbnail image

Barbenheimer – Box office report

Barbie, Oppenheimer இரண்டு படங்களும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்தது.

Margot Robbie & Ryan Gosling in Barbie

வெளிவந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆன நிலையில் இந்த படங்களின் வசூல் பற்றிய ஒரு ரிப்போர்ட்.

Cillian Murphy in OPPENHEIMER

படம் ரிலீஸ் ஆகும் முன்னயே என்னதான் இரண்டு படங்களுக்கும் போட்டி என்றாலும் Barbie படத்தின் கை சற்று ஓங்கி தான் இருந்தது.

எனக்கு தெரிந்து இந்தியா உட்பட சில நாடுகளில் மட்டுமே Oppenheimer அளவிற்கு Barbie படத்திற்கு எதிர்பார்ப்பு இல்லை.

Margot Robbie & Ryan Gosling in Barbie

ஆனால் என்ன செய்வது Barbie பொம்மை, அழகான Margot Robbie , Ryan Gosling, டைரக்டர் Greta Gerwig (இவங்களே ஒரு பார்பி மாதிரி தான் இருக்காங்க) கமர்ஷியல் அம்சங்கள் கொண்ட படத்தின் முன்னாடி Oppenheimer எனும் ஒரு விஞ்ஞானியின் சுயசரிதை தழுவி எடுக்கப்பட்ட வரலாற்று படம் போட்டியிட முடியாது என்பது தான் உண்மை.

Greta Gerwig

Christopher Nolan தவிர வேறு யாராவது Oppenheimer எடுத்து இருந்தால் இந்த அளவு விளம்பரம் மற்றும் Barbie க்கு போட்டி என்ற அளவிற்கு கூட பேசப்பட்டு இருக்காது.

Christopher Nolan & Cilian Murphy

ஆனால் சினிமா ரசிகர்களை பொறுத்த வரையில் இது ஒரு அருமையான நிகழ்வு. இரண்டு பெரிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸ். எதிர்பார்த்த அளவுக்கு இரண்டு படங்களும் கல்லா கட்டிவிட்டன அதை பற்றி பாக்கலாம்.

படம் ரிலீஸான முதல் வார இறுதியில்

Barbie – $155M
Oppenheimer – $80.5M

இந்த வருடத்தில் மிகப்பெரிய Opening என்ற சாதனையை படைத்தது.

அது மட்டும் இல்லாமல் வார இறுதியில் அதிக வசூலை அள்ளிய பெண் இயக்குனரின் படம் என்ற சாதனையையும் படைத்தது.

Greta Gerwig

இதற்கு முன்னால் 2017 ல் வெளிவந்த Wonder Woman படத்தை இயக்கிய Patty Jenkins இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ($103M).

இதே நேரத்தில் Oppenheimer $80 மில்லியன் வசூல் என்பதும் சாதனையாகவே கருதப்படுகிறது. யேலும் Oppenheimer ஒரு ‘R’ படம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

My Personal Recommendation – Read Review & Buy Oppo Enco M32 in Amazon

இப்போதைய நிலவரப்படி உலக அளவிலான வசூலில் $400M கடந்து Barbie படம் ஓடிட்டு இருக்கு. இதில் உள்ளூர் வசூல் மட்டும் $214M.

John Wick 4 ($187M) ரெக்கார்டை உடச்சுட்டு போய்ட்டு இருக்கு.

Barbie படத்தின் பட்ஜெட் $145M ஆகும். ஆனால இந்த படத்தின் மார்க்கெட்டிங் பட்ஜெட் $150M என்பது குறிப்பிடத்தக்கது.

Oppenheimer உலக அளவில் மொத்தமாக $238M வசூல் செய்து உள்ளது. இதில் உள்ளூர் வசூல் மட்டும் $107M .

Oppenheimer படத்தின் பட்ஜெட் 100M ஆகும். அதனால் படத்தின் பட்ஜெட்டை வைத்து பார்க்கும் போது வசூலில் மிகப்பெரிய வெற்றி என்றே சொல்லலாம்.

இரண்டு படங்களுக்கும் வசூலில் போட்டி என்று சொன்னாலும். மொத்தமாக சுருக்கமாக சொல்வதென்றால் சினிமாவிற்கு கிடைத்த வெற்றி.

Source: https://variety.com/2023/film/box-office/barbie-box-office-crosses-200-million-oppenheimer-100-million-1235679593/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Indiana Jones and the Dial of Destiny – Box office updateIndiana Jones and the Dial of Destiny – Box office update

Indiana Jones and the Dial of Destiny – Box office update கிட்டத்தட்ட $300 மில்லியன் செலவு பண்ணி எடுத்த படம் எவ்வளவு கலெக்சன் பணணிருக்குனு பாக்கலாம். Domestic & Global Box Office இந்த வாரம் அமெரிக்காவில்

Mission: Impossible – Dead Reckoning – Box Office ReportMission: Impossible – Dead Reckoning – Box Office Report

MI7 – வெளியான முதல் வாரத்தின் முடிவில் உள்ளூர் பாக்ஸ் ஆபீஸில் 80 மில்லியன் வசூலித்து உள்ளது. உலக அளவில் சுமார் 70 நாடுகளில் இருந்து 155 மில்லியன் டாலர் வசூல் ஆகி உள்ளது. ஆக மொத்தம் ரிலீசான 5 நாளில்