The Last Of Us – Season 1

The Last Of Us – Season 1 post thumbnail image

 9 Episodes, Tamil dub ❌ @hotstar

⭐⭐⭐.75/5

நிறைய எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பித்த தொடர். முதல் சீசன் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.

அதனால் இந்த சீரிஸ் நல்லா இல்லை என்றும் சொல்ல முடியாது. 

இந்த தொடரை பற்றி எழுதிய Preview என்ன மாதிரியான தொடர் என்பதை சொல்லும். 

The last of us series review, the last of us review in Tamil, the last of us Tamil review

இந்த தொடரின் எதிர்பார்ப்பு எகிற‌ முக்கிய காரணம் Post Apocalyptic Series. அப்படி சொன்னா நம்ம எதிர்பார்ப்பது 2 விஷயங்கள்.

1. Locations

2. Zombies

Locations பற்றி எல்லாம் குறையே சொல்ல முடியாது. Production Values மற்றும் செட்டிங்ஸ் தரமா இருந்தது. 

அதே மாதிரி Zombies மட்டுமே காமிச்சுட்டு இருந்தாலும் போரடிக்கும். அதனால எமோஷனல் விஷயங்கள் தொடருக்கு முக்கிய தேவை. 

என்னை பொறுத்த வரைக்கும் Zombie, Action & Emotional balance சரியாக பண்ணவில்லை என்று நினைக்கிறேன். Zombies & Action ஐ குறைத்து விட்டு நிறைய எமோஷனல் விஷயங்கள் சேர்த்து விட்டார்கள். அதுவும் கிட்டத்தட்ட 2 முழு எபிசோட்கள் சென்டிமென்ட் தான். 

ஏற்கனவே கொஞ்சம் மெதுவாக போய்ட்டு இருந்த தொடர் இந்த மாதிரி எபிசோட்கள் காரணமாக ரொம்பவே பொறுமையை சோதித்து விட்டது எனலாம்‌. 

முதல் ரெண்டு எபிசோட் செம சூப்பரா ஆரம்பிச்சது. 

மூணாவது எபிசோட்ல ஒரு Gay Couple கதைய மட்டும் சொல்லி போரடிச்சுட்டானுக. 

4 வது எபிசோட் பரவாயில்லை.

 5 வது எபிசோட் தெறிக்க விட்டானுக. அதுல வர்ற ஜாம்பி ஆக்சன், மேக்கப் எல்லாம் செமயா இருந்தது. 

பலத்த எதிர்பார்ப்புக்கிடையே 6 வது எபிசோட் பாக்க உக்காந்தா கொஞ்சம் பரவாயில்லை. 

அடுத்த 7 வது எபிசோட் Ellie flashback னு வைச்சு செஞ்சுட்டானுக. 

சரி அவ்வளவு தான் இது தேறாதுனு நினைக்கிறப்ப கலக்கலான 8 வது எபிசோட் வந்தது. 

9 வது மற்றும் கடைசி எபிசோட் ஒரு ஆவரேஜான எபிசோட். ஆனா நல்ல ஒரு closure கொடுத்தது முதல் சீசனுக்கு. 

டெக்னிக்கல், நடிப்பு எல்லாம் தரமா இருக்கும்.

அதுவும் Pedro Pascal & Bella Ramsay இருவருக்கு உள்ள அந்த அப்பா பொண்ணு மாதிரயான கெமிஸ்ட்ரி நல்லா இருக்கும்.

முடிவா சொல்லனும்னா

 You love it or hate it but can’t ignore it. 

Worth watching 👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Hell Or High Water – 2016Hell Or High Water – 2016

  இது ஒரு செமயான க்ரைம் த்ரில்லர்.  இரண்டு சகோதரர்கள் உள்ளனர். அண்ணன் சரியான முரடன். வாழ்க்கையில் பாதி நாள் சிறைச்சாலையில் கழித்தவன்.  தம்பி பெரிய அளவில் எதிலும் சிக்காமல் இருப்பவன். சமீபத்தில் டிவோர்ஸ் ஆனவன். நம்ம பரம்பரை தான் ஏழை,

Plane – 2023Plane – 2023

 Plane – 2023  #action  ⭐⭐⭐.5/5 #Tamil ❌ – பைலட் ஹீரோ புயல் காரணமாக விபத்தில் சிக்கிய ப்ளைட்டை தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் காட்டுக்குள் தெரியாமல் இறக்குகிறார். – பயணிகள்+ பைலட் தப்பினார்களா ?  வழக்கமான ஒரு படம் Nothing

[Korean Movie ] Unstoppable – 2018[Korean Movie ] Unstoppable – 2018

நீங்க ஹாலிவுட் ரயில் படமான Unstoppable னு நினைத்து வந்து‌ இருந்தால் இங்கே தொடரவும்  Unstoppable (Hollywood-English) [Quick Review]  நம்ம அதிரடி ஹீரோ Don Lee (Train To Busan , The Gangster The Cop The Devil)