Special Powers இருக்குறவங்களுக்காக உள்ள ஸ்கூலுக்கு வரும் ஹீரோயின். அங்கு நடக்கும் தொடர் கொலைகளுக்கு காரணம் யார் என்பதை கண்டுபிடிப்பதை பற்றிய தொடர்.
Wednesday – 2022 – Series

Fantasy படங்கள்/தொடர்கள் பிடிக்கும் என்றால் கண்டிப்பாக பார்க்கலாம் 👍
நல்ல டைம் பாஸ்.
8 Episodes #Netflix
IMDb 8.4 | RT 72%
ஹீரோயின் யாரை பத்தியும் கவலைப்படாத ஒரு வித்தியாசமான கேரக்டர். இவர் ஸ்கூலுக்கு வந்த பிறகு தொடர்ச்சியான பல கொலைகள் நடக்கிறது.
இதனை விசாரிக்க ஆரம்பிக்க இவளது குடும்பமும் அதில் சம்பந்தப்பட்டு இருக்கிறது.
பல சவால்களை கடந்து இதன் மர்மத்தை என்ன வென்று எப்படி கண்டுபிடித்தார் என்பது தான்.
இந்த ஃபேன்டசி , மேஜிக் எல்லாம் விட்டு விட்டு பார்த்தால் கடைசியில் கதை என்னமோ ஒடுக்கப்பட்ட Vs ஒடுக்கிய மக்கள் கதை தான் 🚶
அந்த “Thing” ரோலில் வரும் அந்த கை நல்ல ஒரு கிரியேட்டிவிட்டி.. நன்றாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த தொடரின் பெரிய ப்ள்ஸ் ஹீரோயினான Jenna Ortega வின் நடிப்பு.
கண்டிப்பாக பார்க்கலாம் 👍