Spring Movie Review
Horror, SciFi & Romance கலந்த ஒரு வித்தியாசமான படம் பாக்கனும்னா இந்த படம் பாருங்க.
அமெரிக்காவிருந்து இத்தாலிக்கு செல்லும் இளைஞனுக்கும் அங்கு வசிக்கும் மர்மமான ஒரு பெண்ணுக்கும் இடையே வரும் காதல் பற்றிய படம்.
ஹீரோ ஒரு பாரில் சமையல்காரர் ஒரு பிரச்சினை காரணமாக நாட்டை விட்டு ஓடி இத்தாலி போகிறார்.
அங்கு ஒரு அழகான மற்றும் மர்மமான பெண்ணை சந்திக்கிறான். அவளுடைய நடவடிக்கைகள் வித்தியாசமான முறையில் இருக்கிறது.
ஒரு நாள் அவள் உண்மையில் யார் என்பது தெரியவர அதிர்ச்சியில் உறைகிறான்.
அதற்கு அப்புறம் அவன் என்ன முடிவு எடுக்கிறான் என்பதை படத்தில் பாருங்கள்.
படம் ரொம்பவே மெதுவாக தான் போகும். நிறைய பேசுவார்கள். ரொம்ப பயமுறுத்தும் திகில் காட்சிகள் இல்லை. இதில் காட்டப்படும் ஹாரர் ஒரு மாதிரி வித்தியாசமா இருந்தது.
கடைசியில் அந்த ஹீரோவை பார்த்தால் என் மனதில் தோன்றியது “இருந்தாலும் உனக்கு ரொம்ப தைரியம்பா ”
சினிமா ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கலாம் 👍
மற்றவர்கள் உங்களது தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்து பாருங்கள்.
கண்டிப்பாக 18+