மகனதிகாரம் – maganadhigaram -2

மகனதிகாரம் – maganadhigaram -2

தீபாவளிக்கு ஊர்ல இருந்து வர்றப்ப  எங்க அம்மா அவங்க செஞ்ச ரவா லட்டு மற்றும் முறுக்கு ரெண்டையும் நெறய பார்சல் பண்ணி கொடுத்து விட்டாங்க. 

நானும் ரவா லட்ட ஃப்ரிட்ஜில் வைத்து அப்பப்ப எடுத்து சாப்பிட்டு கொண்டு இருந்தேன். நேத்து சாயந்தரம் ரூம்ல ஒர்க் பண்ணிட்டே ஒரு லட்ட எடுத்துட்டு வந்து ரசிச்சு ரசிச்சு  சாப்டுட்டு இருந்தேன். 
பக்கத்துல உக்கார்ந்து ஹோம் ஒர்க் எழுதிட்டு இருந்த பையன். என்னப்பா ரவா லட்டு உங்களுக்கு பிடிக்குமா ? என்று கேட்டான்.  நானும் ஆமாடா தம்பி ரவா லட்டு அப்பாக்கு ரொம்ப பிடிக்கும். 
அதுவும் உங்க பாட்டி மாதிரி யாராலும் இவ்வளவு டேஸ்ட்டா ரவா லட்டு செய்யவே முடியாதுனு சொல்லிட்டு சாப்பிடுவதை  தொடர்ந்தேன். 
நைட்டு எல்லாரும் உக்கார்ந்து சாப்டுட்டு இருந்தோம்.
 என் பையன் மெதுவா அம்மா நீங்க செய்யுற ரவா லட்டும் நல்லா தானமா இருக்கு என்றான் ? 
என் மனைவி ஏன்டா அப்படி சொல்றனு கேட்டா.. 
என் பையன் ரூமுக்குள் நடந்த உரையாடலை அப்படியே வார்த்தை மாறாமல் ஒப்பித்தான்.
உங்கப்பாவுக்கு அவங்க அம்மா செஞ்சா மட்டும் தான் பிடிக்கும் என ஆரம்பித்து 4 வருஷத்துக்கு முன்னாடி அவ தீபாவளிக்கு ரவா லட்டு போட்ட கதை எல்லாம் சொல்லி ஒரு அரைமணி நேரம் ஓடுச்சு. 
காலைல எந்திரிச்சு வயிறு ஒரு மாதிரி இருக்குனு சொல்லிட்டேன்.
ஆமா அம்மா செஞ்ச ரவா லட்டுனு தின்னுட்டே இருந்தா அப்படி தான் இருக்கும். 
தொண்டை ஒரு மாதிரி கரகரனு இருக்கு .. ஆமா அம்மா… லட்டு..‌loop 2 
நல்ல மழை பெய்யுது பஜ்ஜி சாப்டா நல்லா இருக்கும்னு .. ஆமா அம்மா … லட்டு…loop 3
Loop infinity ல இன்னும் பல வருஷம் போகும் போல..
ஒரு ரவா லட்டு நல்லா இருக்குனு சொன்னது குத்தமாயா…அதுவும் நேரடியா சொன்னா இதுலாம் நடக்கும் தெரிஞ்சு தான் இவன்ட்ட  சொன்னேன் ‌..
நான் பெத்ததது நேரம் பார்த்து நேக்கா கோர்த்து விட்டுட்டு போயிடுச்சு 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Rikki’s Restaurant – Palavakkam – ReviewRikki’s Restaurant – Palavakkam – Review

பல வருஷமா பீச் பக்கத்துல இருக்குற இந்த கடைக்கு போகணும்னு நினைத்தது உண்டு. நேத்து தான் வாய்ப்பு கிடைத்தது. வொர்த்தானு பாக்கலாம். Food ⭐⭐⭐.5 Ambience ⭐⭐⭐ Sevice ⭐⭐ Price - OK

Financial Crimes – ரோமப் பேரரசை விற்ற கதை தெரியுமா உங்களுக்கு ?Financial Crimes – ரோமப் பேரரசை விற்ற கதை தெரியுமா உங்களுக்கு ?

கி.பி. 193 மார்ச் 23  ஆம் தேதி உள்நாட்டு கலவரங்கள் மற்றும் அமைதியின்மையை பயன்படுத்தி அப்போதைய அரசரான Pertinax என்பவரை கொலை செய்து விட்டு  ரோமப் பேரரசையே ஏலம் விட்டார்கள் அரசரின் நம்பிக்கையை பெற்ற முதன்மை காவலர்கள் Praetorian Guard (a