Dark – Season 2

Dark Series Review 

சீசன் 1 முடிஞ்சது 2052 ல ஆனா 2வது சீசன் ஆரம்பிக்கிறது 1921.  இத பார்த்த உடனே தெரிஞ்சது இந்த சீசன்ல ரொம்பவே கவனமா பாக்கணும் என்று. 

மொத்தம் 8 எபிசோட்கள் இந்த சீசனில். 

Dark series review in tamil, dark season 2 review in tamil, dark season review, dark review, dark series free download , dark all seasons

இந்த சீசன் போன சீசன் அளவுக்கு ரொம்ப குழப்பம் இல்லை. முதல் சீசனில் அங்கும் இங்குமாக நடக்கும் டைம் டிராவல் இந்த சீசனில் ரொம்பவே அதிகம். 

துண்டு துண்டாக அங்கும் இங்கும் நடக்கும் கதையை தெளிவாக ஆக்கியது இந்த சீசன். இதில் அந்த குகையின் origin story, எதுக்கு இப்படி டைம் டிராவல் பண்றாங்க, இதுக்கு எல்லாம் காரணமாணவங்க யாரு, ஏன் இப்படி நடக்குது என பல மர்மங்கள் தெளிவாகிறது. 

ரொம்ப நல்லா புரியாவிட்டாலும் ஓரளவு புரிந்தது 😂

பல Intersting ஆன காட்சிகள் உள்ளது. உதாரணமாக ஒரே கேரக்டரின் கடந்த காலம் மற்றும் நிகழ்கால சந்திப்புகள். குறிப்பாக Adam & Jonas இடையேயான சந்திப்பு. 

என்ன ஒரு சிக்கலான கான்செப்ட் மற்றும் கேரக்டர்கள். எல்லாத்தையும் திறம்பட கையாண்டு கலக்கி இருக்கிறார்கள் ‌‌ .

இதில் டைம் டிராவல் ரொம்பவே அதிகமாக இருக்கும். கதாபாத்திரங்கள் பொசுக்கென்று ஒரு பொட்டியையும் ஒரு ஸ்கூல் பேக்கையும் மாட்டிக்கொண்டு குகைக்கு கெளம்பி விடுவார்கள்.  இல்லாட்டா பெட்டில இருந்து டைம் மிஷின் வச்சு கெளம்பி விடுவார்கள். 

  ‌இந்த சீசன் பொசுக்கென முடிந்த மாதிரி ஒரு ஃபீல்.. ஒரு சின்ன ப்ரேக் விட்டு 3 வது சீசன் ஆரம்பிக்க வேண்டும். 

இதுவரை பார்க்க ஆரம்பிக்கவில்லை என்றால் கண்டிப்பாக பாருங்கள். 

முதல் சீசன் ஆரம்பம் கொஞ்சம் ஸ்லோவாக இருக்கும்.ஆனால் அதற்கு அப்புறம் செமயாக இருக்கும். 

கண்டிப்பாக பாருங்கள் 🔥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Close Encounters Of The Third Kind – 1977Close Encounters Of The Third Kind – 1977

Stephen Spielberg  ஆரம்ப காலத்தில் எடுத்த Sci Fi படம். இது தன்னுடைய கனவு படம் என்று சொல்லி இருக்கிறார்.  ஏலியன் பூமிக்கு வரும் கதை தான் . ஆனால் சொன்ன விதம் அருமை.  IMDb 7.6 #tamil dub ❌

Sick – 2022Sick – 2022

Sick Tamil Review  Genre: #slasher #horror thriller Tamil ❌ ⭐⭐⭐.5 / 5  – கோவிட் டைம்மில் Quarantine பண்ண தனியாக உள்ள பங்களாவுக்கு செல்லும் தோழிகள். இவங்களை கொல்ல வரும் கில்லர் – வழக்கமான Slasher படம்

The Lobster – 2015The Lobster – 2015

The Lobster – 2015 Movie Review In Tamil இந்த படத்த எந்த கணக்குல சேர்க்குறதனு தெரியல. Sci Fi , Romantic, Comedy, Drama னு சொல்லலாம்.  இன்னொரு பக்கம் பார்த்தால் இது ஒரு வித்தியாசமான or விசித்திரமான