Dark – Season-1

Dark Series Tamil Review 

முதல் சீசனில் 10 Episodes கொண்ட ஜெர்மன் Sci Fi சீரிஸ். ஒரு சின்ன ஊருக்குள்ள இருக்குற 4 குடும்பத்துக்குள்ள நடக்குற கதையை 3 டைம் லைன்ல(1953, 1986, 2019) ஒரே நேரத்துல சொல்ற ஒரு தொடர். 

IMDb 8.7

Tamil dub ❌

Available @Netflix

Dark season 1 review, dark season 1 review in tamil, mind bending series review in tamil, dark series review, highly Recommended sci fi series

Sci Fi மற்றும் வித்தியாசமான தொடர்களை பார்ப்பதற்கு ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம். 

ஜெர்மனியில் உள்ள ஒரு சின்ன ஊர் Winden. அணுஉலையை மையமாக கொண்டு வளர்ந்த ஊர். அங்கு ஒரு சிறுவன் திடீரென தொலைந்து போகிறான். அவனை தொடர்ந்து இன்னோரு சிறுவனும் காணாமல் போகிறான். 

ஊருக்குள் திடீரென பறவைகள் செத்து வானத்தில் இருந்து விழுகிறது, ஆடுகள் செத்து மடிகின்றன , கரண்ட் பிரச்சினைகள் வருகிறது. 

அனைவரும் இது ஏதோ அணு உலை காரணமாக வரும் பிரச்சினைகள் என நினைக்கிறார்கள். 

ஆனா இதற்கு எல்லாம் காரணம் ஊருக்கு வெளியே உள்ள ஒரு குகை. அந்த குகை டைம் டிராவல் செய்யும் ஒரு வாசலை கொண்டு உள்ளது. 

இந்த கதையில் வரும் 4 குடும்பமும் செய்யும்/செய்த ஒவ்வொரு செயலும் எவ்வாறு அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தே ஏற்படுத்துகிறது என்பதை சொல்கிறது தொடர். 

அவ்வளவு ஈஸியாக இந்த தொடரை பார்த்து விட முடியாது. நிறைய கேரக்டர்கள் ஒவ்வொருவருக்கும மற்ற இரண்டு டைம் லைனில் வேறு ஒருத்தர் இருப்பார்கள். 

படத்தின் முதல் மூணு எபிசோட்கள் ரொம்ப ரொம்ப பொறுமையா நகரும். ஆனால் அதற்கு அப்புறம் நல்லா போனது. 

கண்டிப்பாக பார்க்கலாம். ஆனால் பொறுமை மற்றும் கூர்ந்து பாக்கணும். ஒரு 20 செகண்ட்ஸ் ஸ்கிப் பண்ணிணால் கூட புரியாமல் போக வாய்ப்பு இருக்கு. 

எனக்கும் இன்னும் சில குழப்பங்கள் இருக்கு 😁😁

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Se7en – செவன் (1995)Se7en – செவன் (1995)

Se7en (Seven) – செவன் (1995)  – Tamil Review  இந்த திரைப்படம் Thriller, Crime, Physiological thriller, Serial killer என எந்த வகையான Genre எடுத்துக் கொண்டாலும் டாப் 3 படங்களில் இருக்கும்.  பிரபல இயக்குனரான David Fincher

The Lighthouse – 2019The Lighthouse – 2019

The Lighthouse Tamil Review  இது ஒரு Horror , Mystery படம். 1890 களில் நடப்பது போன்று எடுக்கப்பட்டு உள்ளது. படம் முழுவதும் கருப்பு வெள்ளை மற்றும். Aspect Ratio குறைவாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. மொபைல்ல கொஞ்சமா நடு ஸ்கிரீன்ல

Titane – 2021Titane – 2021

Titane – 2021 Tamil Review  இது ஒரு French Sci-fi , Horror , Thriller .  இது ரொம்பவே Weird ஆன படம். ஆபாசத் காட்சிகள் மற்றும் வன்முறைக் காட்சிகள் ரொம்ப ரொம்ப அதிகம்.  படத்தோட ஹீரோயினுக்கு சின்ன