Along Came A Spider Tamil Review
ஒரு சைக்கோ கிட்ட மாடடிக்கிட்ட அரசியல்வாதியின் மகளை காப்பாற்ற முயற்சிக்கும் போலீஸ் ஹீரோ.
IMDb 6.4
Tamil dub ❌
OTT ❌
ஹீரோவாக Morgan Freeman நடித்து இருந்ததால் பார்த்த படம்.
பெரிய VIP களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் இருந்து ஒரு அரசியல்வாதியின் மகள் கடத்தப்படுகிறார். கடத்தியது யார் என்று பார்த்தால் 2 வருடங்களுக்கு மேலாக அங்கு வேலை செய்யும் ஆசிரியர்.
கடத்தியவன் வாண்ட்டாக Dr. Cross (Morgan Freeman ) க்கு சில தடயங்களை அனுப்பு அவரை விசாரணைக்கு இருக்கிறான். இவரும் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என விசாரணையில் இறங்குகிறார்.
இவருக்கு துணையாக பளிளியில் குழந்தை காணாமல் போன அன்று பணியில் இருந்த பெண் போலீஸ் ஒருவரும் இணைகிறார்கள்.
அந்த குழந்தையை கடத்தியது யார் அவனின் நோக்கம் என்ன ? குழந்தை காப்பாற்றப்பட்டதா என்பதை படத்தில் பாருங்கள்.
படம் நன்றாகவே ஆரம்பித்தது. பிற்பகுதியில் கொஞ்சம் போர் அடிக்கிறது. இதனால் பல இடங்களில் லாஜிக் பார்க்க வேண்டியது ஆகிடுச்சு.
ஒரு டைம் பாக்கலாம் 👍