Memories Of Murder – Climax – Original Case

Memories Of Murder – Climax – Original Case 


Warning :  Full Spoilers . இன்னும் படத்தை பாக்கலான இத படிக்காதீங்க

படத்தை பத்திய ரிவ்யூ படிக்க : https://www.tamilhollywoodreviews.com/2022/07/memories-of-murder-2003.html

Memories of Murder படம் பாத்து முடிச்ச நிறைய பேருக்கு படத்தோட முடிவு கொஞ்சம் குழப்பமா இருக்கும். இப்ப படத்தோட கதையை சுருக்கமா பார்த்ததுட்டு முடிவு பத்தி பாக்கலாம்.
இந்த படம் 1986 ல் இருந்து 1991 வரைக்கும் தென்கொரியாவின் Hwaseong என்ற ஏரியாவில் நடந்த தொடர் கொலைகளை துப்பறியும் இரண்டு போலீசார் பற்றியது. 
போலீஸ்காரர்களுக்கு பிரச்சினை என்னவென்றால் ஒரு தடயம் கூட கிடைக்காது. இப்ப உள்ளது போல நவீன தொழில்நுட்பம் DNA matching போன்றவை இல்லாத காலகட்டம். 
ஆனா கொலை நடக்கும் நேரத்தில் நடக்கும் சில விஷயங்களை கண்டுபிடிப்பார்கள். 
கொலை நடக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட பாட்டு போட சொல்லி அந்த ஊர் ரேடியோ ஸ்டேஷனுக்கு ஒரு லெட்டர் போயிருக்கும். 
கொலை நடந்த அன்னிக்கு கண்டிப்பாக மழை பெய்து இருக்கும்.  
கொலையான பெண்கள் அனைவரும் சிவப்பு நிற ஆடை அணிந்து இருப்பார்கள். 
இவ்வளவு கண்டுபிடித்து இவன் தான் கொலைகாரன் என ஒருத்தனை தூக்கி
வருவாங்க. ஆனா அவன் சிம்பிளா நான் அவன் இல்லனு சொல்லுவான். 
கொலையான இடத்தில் கிடைத்த சில சாம்பிள் களை DNA டெஸ்ட்டுக்காக அமெரிக்கா அனுப்புவார்கள் ஆனால் அதுவும் பொருந்த விலலை என வந்து விடும். ஆதாரம் இல்லாத காரணத்தால் அவனை விட்டு விடுவார்கள். 
இந்த நிகழ்ச்சி முடிஞ்சு பல வருடங்கள் கழித்து பணி ஓய்வு பெற்று விடுவார் அந்த போலீஸில் ஒருவர். 
ஒரு வேலையாக முதல் பிணம் கண்டுபிடித்த ஏரியாவை க்ராஸ் பண்ணி போகும் போது அந்த  இடத்தில் காரை நிறுத்தி பார்த்து கொண்டு இருப்பார். அப்போது அங்கு வரும் ஒரு சின்ன பெண் இதே மாதிரி கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒருத்தர் பார்த்துட்டு இருந்தார் என்று சொல்லுவாள். 
அதற்கு ஹீரோ அவரு எப்படி இருந்தார் என்று கேட்க அவள் “சாதாரணமாக இருந்தார் ” என்று பதில் அளிப்பாள். அதோடு படம் முடியும். 
ஆக மொத்தம் படத்தோட முடிவு “கொலைகாரனை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே” 
இப்ப ஒரிஜினல் கேஸை‌‌ பத்தி பாக்கலாம். 
1986-1991 வரை நடந்த கொலைகள் மொத்தம் பத்து பெண்கள். 
படம் ரிலீஸான 2003 வரைக்கும் உண்மையான கொலைகாரன் யாரு என்று கண்டுபிடிக்க முடியவில்லை. 
படத்தில் DNA டெஸ்ட்டுக்கு அமெரிக்காவிற்கு அனுப்புவார்கள் ஆனால் உண்மையில் அனுப்பிய நாடு ஜப்பான். 
கொரியாவில் ஒரு சட்டம் உள்ளது. https://en.m.wikipedia.org/wiki/Statute_of_limitations. 
இதன்படி கொலை நடந்து 15 வருடங்களில் கொலையாளிக்கு தண்டனை பெற்று தர முடியவில்லை என்றால் அவர் நிரபராதியாக கருதப்படுவார். 
கடைசி பெண் கொலையான வருடம் 1991 என்பதால் 2006 ஆம் வருடத்துடன் Statue of limitations முடிந்து விடுகிறது.
ஆனா விதி யாரை விட்டது . 13 வருடங்கள் கழித்து செப்டம்பர் 19, 2019 ஆம் தேதி 50+ வயதில்  உள்ள Lee Choon Jae என்ற நபர் தான் இந்த சீரியல் கில்லர் என அறிவிக்கிறது கொரிய போலீஸ். கொலையான ஒரு பெண்ணின் உள்ளாடையில் கிடைத்த சாம்பிளுடன் இவனது DNA ஒத்துப்போனதாகவும் அறிக்கை விடுகிறது.
ஆனா முதலில் இதை மறுத்த கொலைகாரன் 2 அக்டோபர்‌ 2019 அன்று மொத்தம் 14 கொலைகள் அதில் 10 சிரியல் கொலைகளையும் தான் செய்ததாக ஒத்துக்கொண்டான். 
Memories of the murder ending explained in tamil, memories of Murder original case, serial killer true story, Bong Joon Ho movies review in tamil,

இதெல்லாம் நடந்த போது அவன் இருந்தது சிறையில் . தனது சொந்தக்கார பெண்ணை கொன்ற குற்றத்திற்காக ஆயுள் தண்டனை கைதியாக களி தின்னுட்டு இருந்துருக்கான் இந்த சைக்கோ கொலைகாரன்.
 ‌‌கொலைகாரன் பிடிபட்ட பிறகு இந்த படத்தின் டைரக்டர் Bong Joon Ho  சொன்ன வார்த்தைகள். 
 “When I made the film, I was very curious, and I also thought a lot about this murderer. I wondered what he look[ed] like.” He later added, “I was able to see a photo of his face. And I think I need more time to really explain my emotions from that, but right now I’d just like to applaud the police force for their endless effort to find the culprit.”
Source: https://en.m.wikipedia.org/wiki/Memories_of_Murder

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Operation Odessa – ஆப்ரேஷன் ஒடெசா (2018)Operation Odessa – ஆப்ரேஷன் ஒடெசா (2018)

Operation Odessa – ஆப்ரேஷன் ஒடெசா (2018) Documentary  Tamil Review இது ஒரு நெட்ப்ளிக்ஸ் டாக்குமெண்டரி…  டாக்குமெண்டரி ஆரம்பத்தில் ஒருவர் பேசுகிறார்..  நான் ஒருத்தனுக்கு ஃபோன் பண்ணி ஒரு நீர்மூழ்கிக் கப்பல் வாங்கனும் கிடைக்குமா என்று கேட்டேன்…  அவன் நான்

Jungle -2017Jungle -2017

Jungle Movie Tamil Review  1981 ல் காட்டுக்குள் அட்வென்ட்சர் டிரிப் போகும் 3 நண்பர்களின் சர்வைவல் பற்றிய படம் . தப்பி பிழைத்து வந்தவர்களில் ஒருத்தர் நடந்த சம்பவங்களை வைத்து  எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம். IMDb 6.7

Becoming Warren Buffett – 2017Becoming Warren Buffett – 2017

Warren Buffett – முதலீட்டாளர்கள் மத்தியில் இந்த பெயர் மிகவும் பிரபலம். சரியான கம்பெனியில் முதலீடு, பொறுமை போன்றவற்றின் மூலம் நம்மால் கூட நினைத்து பார்க்க முடியாத படி சம்பாதித்தவர்.  இவரது வாழ்க்கையை பற்றிய டாக்குமெண்டரி.  முதலீடுகள் மூலமாகவே பணக்காரர் ஆனவர்.