Kungfu Killer (Kung Fu Jungle ) – 2014 – Review In Tamil
அருமையான அதிரடி ஆக்சன் படம். குங்ஃபூ படம் பாத்து இருப்போம், சீரியல் கில்லர் படம் பார்த்து இருப்போம். ஒரு குங்ஃபூ வீரன் சீரியல் கில்லரா மாறி மத்த குங்ஃபூ வீரர்களை எல்லாம் கொல்றான்.
IMDb 6.4
Tamil dub ✅
Available @primevideo
அத ஹீரோ தடுத்து நிறுத்தினாரானு படத்தில் பாருங்கள்.
ஹீரோ (Donnie Yen ) ஒரு திறமையான தற்காப்புக் கலை நிபுணர். ஒரு சண்டையில் எதிராளியை கொன்று விடுகிறான். தான் செய்தது தப்பு என்பதை உணர்ந்து போலீஸில் சரணடைந்து ஜெயிலில் உள்ளான்.
ஊருக்குள் திடீரென தற்காப்புக் கலை நிபுணர்கள் ஒவ்வொருவராக கொடூரமாக கொல்லப்படுகிறார்கள்.
இந்தக்கேஸை விசாரிக்க ஒரு பெண் அதிகாரி நியமிக்கப்படுகிறார். சிறையில் இருக்கும் ஹீரோ வில்லனை கண்டுபிடிக்க உதவுவதாகவும் பதிலுக்கு போலீஸ் இவருக்கு விடுதலை தர வேண்டும் என டீல் பேசி வெளி வருகிறார்
இன்னொரு பக்கம் கொலைகள் தொடர்ந்து நடக்கிறது. யார் இந்த கொலையாளி ? எதற்கு கொலைகள் செய்கிறான் ? ஹீரோ கொலைகளை தடுத்து நிறுததினானா என்பதை படத்தில் பாருங்கள்.
சும்மா சண்டை கொலை இல்லாமல் ஹீரோ மற்றும் வில்லன் கேரக்டர் டெவலப்மென்ட் நன்றாக உள்ளது.
ஆரம்பம் முதலே ஹீரோ வில்லன் ஒத்தைக்கு ஒத்தை சண்டையை நோக்கி நகர்கிறது படம்.
சண்டைக்காட்சிகள் எல்லாம் தெறிக்க விட்ருக்காங்க. ஆக்சன் பட பிரியர்கள் கண்டிப்பா பாருங்க 🔥🔥
ஒரு சர்ச் பாதிரியாரை அங்கே வேலை செய்யும் இளைஞன் ஒருவன் கொடூரமான முறையில் கொன்று விடுகிறான். IMDb 7.7 Tamil dub ❌ OTT ❌ போலீஸ் அவனை கைது செய்கிறது ஆனால் நான் கொல்லவில்லை என்கிறான். இவனுக்கு ஆதரவாக வக்கீலான
இயக்குனர் Denis Villeneuve குறிப்பிட்டு சொல்லக்கூடிய இயக்குனர்களில் ஒருவர். இவரது படங்களான Arrival, Sicario, Prisoners etc., எல்லாம் வேற லெவலில் இருக்கும். IMDb 8.3 தமிழ் டப் இப்போதைக்கு இல்லை. இந்த படம் ஒரு Sci Fi, Adventure படம்.
முதல் சீசன் முழுவதும் சிறையில் இருந்து சகோதரர்கள் தப்பிப்பது பற்றியது.. இந்த சீசன் சகோதரர்கள் மற்றும் அவர்களோடு சேர்ந்து தப்பித்த 6 பேர்களின் சர்வைவல் பற்றி சொல்கிறது. 2 Season, 22 Episodes Tamil dub ❌ Available @Hotstar Read