Indian Predator: The Butcher Of Delhi- 2022
தலைநகரில் 2003 ஆம் வருடத்தில் இருந்து ஏகப்பட்ட கொலைகளை செய்து பிணத்தின் தலைகளை திஹார் ஜெயில் வாசலிலேயே போட்டு போலீஸுக்கு டிமிக்கி கொடுத்துட்டு இருந்த ஒரு சீரியல் கில்லர் பற்றிய டாக்குமெண்டரி.
3 Episodes
IMDb 6.1
Tamil dub ✅
Available Netflix
முன்னாடி எல்லாம் யாரும் அவ்வளவா டாக்குமெண்டரிகளை கண்டு கொண்ட மாதிரி தெரியலை ஆனால் போன வருடம் வந்த House Of Secrets – The Burari Deaths கொஞ்சம் impact கொடுத்தது. அதுனாலயோ என்னமோ இன்னொரு Crime Documentary யோட வந்துருக்கு Netflix.
ஒரு சைக்கோ கில்லர் சின்ன தடயம் கூட இல்லாம வரிசையா கொல்றான். அது மட்டுமல்ல போலீஸுக்கு போன் போட்டு அசிங்க அசிங்கமா திட்டுறான். முடிஞ்சா பிடிச்சுப் பாருன்னு சவால் விடுறான். இவனை எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதை சொல்கிறது இந்த டாக்குமெண்டரி.
2 எபிசோட் நல்லா இருக்கு. கடைசி எபிசோட் ஓவரா கொலைகாரனுக்கு பில்டப் போடுறானுக.
இப்படி பட்ட ஆட்கள் எல்லாம் ஊருக்குள்ள சுத்துறானுகனு பாக்குறப்ப கொஞ்சம் பீதியா தான் இருக்கு.
ஒரு Forensic லேடி என்ன என்னமோ சொல்லுது.. மறுவாழ்வு தரணும்னு சொல்லுது. தனிப்பட்ட முறையில் எனக்கு இதில் உடன்பாடு இல்ல. இவ்வளவு கொலைகளை ப்ளான் பண்ணவன எல்லாம் தூக்குல போடாம பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்கானுக. வெளில வந்தா இவனுக எல்லாம் சும்மா இருக்க மாட்டானுக.
Watch Trailer: