The VVitch: A New-England Folktale Tamil Review
1630 களில் அமெரிக்காவில் இருந்த பிரிட்டிஷ் காலனியில் நடக்கும் கதை.
IMDb 6.9
Available @Amazonprime
Tamil dub ❌
இயக்குனர் Robert Eggers (
The Northman) இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்.
சூனியக்காரி, மாயம், மந்திரம் காரணமாக ஒரு குடும்பமே எவ்வாறு அழிந்து போனது என்பதை சொல்லும் படம்.
நாட்டுப்புற சூனியக்காரி கதைகள் , கிடைத்த தகவல்களை வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர்.
காட்டுக்கு மிக அருகில் வீட்டில் ஒரு குடும்பம் வசித்து வருகிறது. மொத்தம் 5 குழந்தைகள் அந்த வீட்டில். மூத்த பெண் Thomasin (Anya Taylor Joy) . ஒரு நாள் கடைசி குழந்தை காணமல் போகிறது அதுக்கு அப்புறம் இரண்டாவது பையன் காணமல் போய் திரும்ப வருகிறான்.
இதன் பின் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன. ஒரு கட்டத்தில் மூத்த பெண் தான் சூனியக்காரி என்று அனைவரும் சந்தேக படுகின்றனர்.
கடைசியில் யார் சூனியக்காரி மற்றும் அந்த குடும்பம் என்ன ஆனது என்பதை படத்தில் பாருங்கள்.
படம் ரொம்ப ஸ்லோ. ஆனா ஹாரர் படத்துக்கான லொக்கேஷன்கள், பிண்ணனி இசை எல்லாம் அருமை.
Northman படத்தை இயக்கிய Robert Eggers ன் மற்றொரு படம் இது.
ஹாரர் படம் தான் ஆனா பயம் எல்லாம் ரொம்ப வராது.
ஒரு தடவ பார்க்கலாம் .
Director: Robert Eggers
Cast: Anya Taylor-Joy, Ralph Ineson, Kate Dickie, Harvey Scrimshaw, Ellie Grainger, Lucas Dawson
Screenplay: Robert Eggers