Tejas – MDU – Chennai – பயணம்

Tejas – MDU – Chennai – பயணம் – ஒரு அனுபவம் 

தேஜஸ் ட்ரெயின் விட்டது முதல் எப்படியாவது ஒரு தடவையாவது போய்விட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. 

 நேத்து தான் ஒரு வழியாக அந்த வாய்ப்பு கிடைத்தது. எனக்கு தெரிந்து இது கிட்டத்தட்ட தனியார் ரயில் தான் என்று நினைக்கிறேன் ‌. கொஞ்சம் காஸ்ட்லி தான்.
Tejas madurai to Chennai travel experience, Tejas ticket fare,  Tejas train in tamilnadu, Chennai Madurai fast travel, Tejas travel time, facilities,

முதலில் தேஜஸ் ன் Chair Car மற்றும்  வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் Chair Car ஐ ஒப்பிட்டு பார்த்தால் கொடுக்கும் காசுக்கு இது வொர்த்தா என்ற ஒரு ஐடியா கிடைக்கும். 
வைகை எக்ஸ்பிரஸ் : 
Chair Car Fare  : 625 
பயண நேரம் : 7 மணி நேரம் 20 நிமிடங்கள்
தேஜஸ் : 
Chair Car Fare: 
963 ( Without Snacks & Without Food) 
1255 ( With Snacks & Food
பயண நேரம் :  6 மணி நேரம் 15 நிமிடங்கள்
சாப்பாடு மற்றும் ஸ்னாக்ஸ் இல்லாமல் பார்க்கும் போது வைகையை விட 338 ரூபாய் அதிகம் வருகின்றது.  
ஆனால் 1 மணிநேரம் பயண நேரம் குறைவு.  
Wifi , சுத்தமான டாய்லெட், ஆட்டோமேட்டிக் கதவுகள், பணியாளர்கள் என்பதை பார்த்தாலும் 338 ரூபாய் அதிகம் தான்.
ஆனால் நேரம் தான் முக்கியம் என்று ஓடும் மக்களுக்கு 1 மணிநேரம் பெரிய விஷயம் அதனால் கண்டிப்பாக அதிகம் (338 ரூபாய்) பணம் கட்டுவது  வொர்த்து 👍
இப்ப சாப்பாடு மற்றும் ஸ்னாக்ஸ் சேர்த்து என்றால் கட்டணம் 1255 ரூபாய் வருகிறது.
தேஜஸ்ல் சாப்பாடு இல்லாத டிக்கெட்டுக்கும் இதற்கும் வித்தியாசம் 292 ரூபாய். 
இந்த 292 ரூபாய் வொர்த்தா என பாக்கலாம். 
ட்ரெயின் கிளம்பிய சிறிது நேரத்தில் ஒரு ட்ரேயில் வைத்து கீழே உள்ள ஐட்டங்கள் தரப்பட்டன.
வாட்டர் பாட்டில், அதிரசம், கடலை மிட்டாய், சேவு பாக்கெட்,  ஒரு சமோசா, Tomoto Sauce Packet, Ready Mix Coffe Powder ,  ஒரு கப் சுடுதண்ணீர் (காபி மிக்ஸ் ) பண்ண. 
சாயந்தம் 6 மணி பக்கத்துல ஒரு சின்ன பன், பட்டர் பாக்கெட் , சால்ட் , பெப்பர் மற்றும் தக்காளி சூப் கொடுத்தாங்க. 
7.30 மணி பக்கத்துல டின்னர் கொடுத்தாங்க. 
2 சப்பாத்தி, சிக்கன் கறி(2 ஃபீஸ்) , Jeera Rice, உருளைக்கிழங்கு பிரை, ஒரு கப் தயிர், சின்ன ஊறுகாய் பாக்கெட் கடைசியில் ஐஸ்கிரீம். 
சப்பாத்தி, கறி எல்லாம் சுட சுட இருந்தது. டேஸ்ட்டம் நல்லா தான் இருந்தது. 
என்னைப் பொறுத்தவரை சாப்பாடு மற்றும் ஸ்னாக்ஸ் 292  ரூபாய்க்கு வொர்த்து தான். 
எல்லாமே நாம் இருக்கும் இடத்துக்கு வருகிறது. சாப்பிட்டு முடித்ததும் அவர்களே வந்து தட்டுக்களை எடுத்துக்கொண்டு போகிறார்கள். 
இன்னும் ஒரு முக்கியமான விஷயம் சாப்பாடு ட்ரெயினில் சாப்பிட்டு விடுவதால் வெளியே வந்து ஹோட்டலில் சாப்பிடும் 1 மணி நேரம் மிச்சம் ‌‌ .
உதாரணமாக 10 மணிக்கு நான் வீட்டுக்கு வந்துவிட்டேன். சாப்பிட்டுவிட்டு வந்தால் கண்டிப்பாக 11.30 ஆகிருக்கும்.
திருச்சி மக்களுக்கு இது நல்ல ஒரு வரப்பிரசாதம் சாயந்திரம் டீ சாப்பிட்டுட்டு ட்ரெயின் ஏறினால் நைட்டு சாப்பாட்டுக்கு சென்னை போய்டலாம்.
நிறைய பெண்கள் குழந்தைகளுடன் வந்து இருந்தார்கள், வயதான தம்பதிகள் , பிஸினஸ் மக்கள் , IT employees என பலரும் இருந்தனர். 
நியூஸ் பேப்பர் மற்றும் வாட்டர் பாட்டில்க்கு வலுக்கட்டாயமாக காசு வாங்குறாங்க என்ற ஒரு கம்ப்ளெய்ன்ட் இருந்தது. ஆனால் இப்ப இருக்குற மாதிரி தெரியல. பேப்பர் எதுவும் கொடுக்கப்படவில்லை. 
தனிப்பட்ட முறையில் எனக்கு இந்த பயணம் ரொம்ப பிடித்து இருந்தது. கொஞ்சம் காஸ்ட்லி என்றாலும் வொர்த்து தான். 
வாய்ப்பு கிடைத்தால் பயணம் செய்து பாருங்கள் 👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Why Online Rummy is dangerous?Why Online Rummy is dangerous?

 Online Rummy – ஏன் இதுல லாபம் பாக்க முடியாது? ஏன் இவ்வளவு உயிரிழப்புகள் ?  Online Rummy – ஏன் இதுல லாபம் பாக்க முடியாது? ஏன் இவ்வளவு உயிரிழப்புகள்?  என் நண்பன் எனக்கு கூறிய விளக்கம். அவன் ரொம்ப

Google Photos Tips – ஆண்ட்ராய்டில் Cloud Sync செய்வது எப்படி ?Google Photos Tips – ஆண்ட்ராய்டில் Cloud Sync செய்வது எப்படி ?

கொஞ்ச நாளைக்கு முன்னாடி நண்பர் ஒருவர் Phone / Memory card ல் உள்ள போட்டோஸ் எப்படி Cloud ல் Sync பண்ணணும்னு கேட்டார். நிறைய பேருக்கு இது தெரிஞ்சு இருக்கும் தெரியாதவங்க தெரிந்து கொண்டு யூஸ் பண்ணிக்கோங்க.  Maximum நீங்க

WiFi Password – விழிப்புணர்வுWiFi Password – விழிப்புணர்வு

#WiFi கடைசி 2 தடவ ஊருக்கு வந்தப்பவும் ரொம்ப ரொம்ப ஸ்லோவா இருந்தது. நானும் கம்ப்ளெய்ன்ட் பண்ணா அவங்க பக்கம் நல்லா தான் இருக்குனு சொல்லிட்டாங்க.  எப்ப பார்த்தாலும் நம்ம வீட்ட சுத்தி 20 பசங்க உக்காந்துகிட்டே இருக்காங்க. எதையாவது மொபைல்ல