Suzhal – The Vortex – 2022
விக்ரம் வேதா பட புகழ் புஷ்கர் – காயத்ரி உருவாக்கத்தில் கதிர் , ஐஸ்வர்யா ராஜேஸ்,ஸ்ரியா ரெட்டி மற்றும் பார்த்திபன் நடிபபில் Amazon Prime -ல் வெளிவந்துள்ள Crime Investigation Thriller .
IMDb 8.7
Tamil ✅
1 Season , 8 Episode
OTT Amazon Prime
அழகான மலைப்பிரதேசத்தில் உள்ள ஒரு சின்ன ஊர் சாம்பலூர். இந்த ஊரின் வாழ்வாதாரம் அங்கு உள்ள சிமெண்ட் தொழிற்சாலை.
அந்த தொழிற்சாலையின் யூனியன் லீடர் சண்முகம் ( பார்த்திபன்) அவரின் மூத்த மகள் நந்தினி (ஐஸ்வர்யா ராஜேஷ்) . ஊரின் இன்ஸ்பெக்டர் ரெஜினா (ஸ்ரியா) மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சக்கரை (கதிர்) .
ஊரில் ரொம்ப பிரபல திருவிழாவான 9 நாட்கள் நடைபெறும் மயான கொள்ளை திருவிழாவை கொண்டாட ஊர்மக்கள் ரெடியாகிறார்கள்.
திருவிழாவின் முதல் நாள் அன்று இரவு இரண்டு சம்பவங்கள் நடக்கின்றன. சிமெண்ட் ஆலை தீப்பற்றி எரிகிறது மற்றும் அதே நாளில் சண்முகத்தின் இளைய மகள் நிலா காணமல் போகிறார்.
இரண்டு கேஸ் களையும் விசாரிக்க ஆரம்பிக்கும் ரெஜினா மற்றும் சக்கரை யார் குற்றவாளி என்பதை கண்டுபிடித்தார்களா என்பதை தரமான பல ட்விஸ்ட்களுடன் சொல்கிறது தொடர்.
முதலில் புஷ்கர்-காயத்ரி அவர்களின் ரைட்டிங். பற்றி சொல்லியே ஆக வேண்டும். செம எங்கேஜிங்.. யார் குற்றவாளி என்பதை யூகிக்க முடியாதவாறு சிறப்பாக எபிசோட்களை நகர்த்திய விதம் 🔥
அடுத்து இசை .. C.S. Sam பிண்ணனி இசையில் பிண்ணி பெடலெடுத்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு மற்றும் லொக்கேஷன்கள் தொடரின் பெரிய ப்ளஸ். பெரும்பாலான இடங்களில் ஒரு மாதிரியான மஞ்சள் நிறம் சூப்பராக இருக்கிறது. திருவிழா காட்சிகள் சிறப்பாக படம் பிடித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
இதற்கு மேல் பேசினால் ஸ்பாய்லர் ஆகி விடும்.
மொத்தத்தில் சிறப்பான ஒரு தொடர். சமூகத்தில் ஒரு முக்கியமான பிரச்சினையை சொல்லி , பிற்பகுதியில் சிறப்பான பல ட்விஸ்ட்களுடன் முடிகிறது.
ரொம்ப நாள் கழித்து போலீஸ் கதாபாத்திரத்தில் ஸ்ரியா சிறப்பான தேர்வு. பார்த்திபன், கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நன்றாக நடித்துள்ளார்கள்.
கண்டிப்பாக பாருங்கள் 🔥🔥🔥🔥
Directed by:
Bramma G
Anucharan Murugaiyan
Starring:
Aishwarya Rajesh
Kathir
R. Parthiban
Harish Uthaman
Sriya Reddy
Music by:
Sam C. S.
Trailer: