Saani Kaayidham – 2022

ஒரு சாதாரண பழிவாங்கும் கதை அதை ஹாலிவுட் ஸ்டைலில் ராவாக எடுத்து இருக்கிறார்கள். 

படத்தின் இயக்குனர் Quentin Tarantino ரசிகரா இருப்பார் போல. பழி வாங்கும் காட்சிகள் கொடூர வன்முறை மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள். 
ஜாதி பிரச்சினை காரணமாக போலீஸ் கான்ஸ்டபிள் பொன்னி(கீர்த்தி சுரேஷ்) யை கற்பழித்தது மட்டும் இல்லாமல்  கணவன் மற்றும் குழந்தையை கொடூரமாக கொல்கிறது ஒரு கூட்டம். 
கீர்த்தி தனது அண்ணன் செல்வராகவன் உடன் இணைந்து இந்த கூட்டத்தை கொடூரமாக பழி வாங்குவது தான் படம்.
கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நன்றாக நடித்து இருக்கிறார்கள். 
கேமரா ஒர்க் சிறப்பாக இருந்தது. கேங்காக சண்டைகள் நடக்கும் லொக்கேஷன்களை தேர்ந்தெடுத்த விதம் சிறப்பு. 
குறிப்பாக Metador Murders நடக்கும் அந்த குறுகிய சந்து மற்றும் க்ளைமேக்ஸ் நடக்கும் தியேட்டர். க்ளைமாக்ஸ் காட்சியில் ஏதோ ஒன்று எரியும் என நினைத்தேன். தியேட்டர் திரை எரிந்து இருந்தால் இன்னும் சிறப்பான  Quentin டச்சாக இருந்து இருக்கும் 😏
மற்றபடி படத்தின் நீளம் ஒரு மைனஸ் பாயிண்ட். படத்தின் கரு பழிவாங்குதல் ஆனால் பழிவாங்கும் படலம் ஆரம்பிக்கும் போது 1 மணி நேரத்துக்கு மேல ஆகிடுச்சு.  
கண்டிப்பாக பார்க்கலாம். வன்முறை தூக்கலான படம் . Not for all 👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Collateral – கொலாட்ரல் (2004)Collateral – கொலாட்ரல் (2004)

Collateral Movie Tamil Review  இது ஒரு க்ரைம் திரில்லர் திரைப்படம். ஒரே இரவில் நடப்பது போன்ற படம் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத படம். அதிலும் Tom Cruise (Edge Of Tomorrow) , Jamie Foxx (Project Power,

Frailty – 2001Frailty – 2001

செமயான ஒரு சைக்காலஜிகல் திரில்லர்.  IMDb 7.2 Tamil dub ❌ OTT ❌ FBI பரபரப்பா ஒரு சீரியல் கில்லரை தேடுறாங்க . ஒருத்தன் சரண்டர் ஆகி என் தம்பி தான் அந்த கில்லர்னு சொல்றான்.‌  எதன் அடிப்படையில்  தம்பி

Dear Child – 2023Dear Child – 2023

ஒருத்தன் 13 வருஷமா ஒரு பெண்ணையும், 2 குழந்தைகளையும் வீட்டு சிறையில் வைத்து இருக்கிறான். Episodes: 6Language: German , Tamil ❌⭐⭐⭐.75/5 அந்த பெண் வீட்டுச் சிறையில் இருந்து ஒரு நாள் தப்பிக்கிறாள் அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான்