நல்ல அருமையான Comedy, Adventure படம்.
IMDb 7.8
Tamil dub ❌
OTT ❌
Family ✅✅
ஒரு அநாதை சிறுவனும் அவனுடைய Foster Uncle இருவரையும் ஒரு சின்ன சம்பவம் காரணமாக பெரிய போலீஸ் கூட்டமே காட்டுக்குள் தேடுகிறது. இவர்களை பிடிததார்களா என்பதை படத்தில் பாருங்கள்.
சுட்டியான மற்றும் திருட்டுத்தனம் செய்யும் சிறுவன் Rick . அந்த ஊர் குழந்தைகள் நல அமைப்பு வளர்ப்பு பையனாக ஒரு தம்பதியினரிடம் அனுப்புகிறது.
அந்த தம்பதி காட்டுக்குள் தனியாக வாழ்ந்து வருகிறார்கள். சிறுவனுக்கு அவரகளை மிகவும் பிடித்து விடுகிறது.
ஒரு எதிர்பாராத சம்பவம் காரணமாக சிறுவன் திரும்பவும் குழந்தைகள் நல அமைப்பிடம் செல்ல வேண்டி உள்ளது.
சிறுவனுக்கு இது பிடிக்காமல் காட்டுக்குள் ஓடி விடுகிறான். இவனை தேடி இவனது வளர்ப்பு uncle காட்டுக்குள் போகிறார் .
இருவரும் திரும்ப நேரம் ஆனதால் Uncle தான் சிறுவனை கடத்தி விட்டார்கள் என செய்தி பரவ பெரிய பெரிய படைகளுடன் இருவரையும் தேடும் படலம் தொடங்குகிறது.
இருவரையும் கண்டுபிடித்தார்களா என்பதை படத்தில் பாருங்கள்.
நல்ல சிம்பிளான கதை ஆனால் சென்டிமென்ட் , காமெடி என நன்றாகவே போகிறது படம்.
அந்த சிறுவன் நன்றாக நடித்து இருக்கிறான். Uncle கதாபாத்திரத்தில் Sam Neil சரியான தேர்வு.
படம் முழுவதும் ஒரு பாஸிட்டிவ் அப்ரோச் உடன் போகிறது.
கண்டிப்பாக குடும்பத்துடன் பாருங்கள் 👍👍
Director: Taika Waititi
Starring: Sam Neill; Julian Dennison; Rhys Darby; Rima Te Wiata; Rachel House