Frailty – 2001

செமயான ஒரு சைக்காலஜிகல் திரில்லர். 

IMDb 7.2

Tamil dub ❌

OTT ❌

FBI பரபரப்பா ஒரு சீரியல் கில்லரை தேடுறாங்க . ஒருத்தன் சரண்டர் ஆகி என் தம்பி தான் அந்த கில்லர்னு சொல்றான்.‌  எதன் அடிப்படையில்  தம்பி தான் குற்றவாளி என்பதை தன் சிறுவயது கதை மூலம் சொல்ல ஆரம்பிக்கிறான். 

ஃப்ளாஷ் பேக்கில் அம்மா  இல்லாமல் அப்பாவால் பாசமாக  வளர்க்கப்படும் சகோதரர்கள் (10 &8 வயது) . ஒரு நாள் அப்பா,  கடவுள் என்கிட்ட வந்து பேசுனாரு கெட்ட சக்திகளை அழிக்க சொல்லி லிஸ்ட் கொடுத்தாருனு சொல்லி மனிதர்களை கொல்ல ஆரம்பிக்கிறார். 

இதற்கு இரண்டு மகன்களையும் உதவிக்கு வைத்து கொள்கிறார். அண்ணனுக்கு இதில் விருப்பம் இல்லாவிட்டாலும் வேறு வழி இல்லாமல் தந்தைக்கு உதவியாக இருக்கிறான். 

இந்த மாதிரி இளம் வயதில் மனதளவில் பாதிக்கப் படுகிறார்கள் இரண்டு சிறுவர்களும். 

இந்த கதையும் , நிகழ்கால நிகழ்வுகளும் படத்தை தொய்வு இல்லாமல் நகர்த்துகிறது. படத்தின் கடைசி கட்டத்தில் தரமான ட்விஸ்ட்டுகள் உள்ளன.   

படத்தில் ரத்தமே தெறிக்காமல் ரத்தம் தெறிக்கும் காட்சிகளை எடுத்து இருப்பார்கள். 

நல்ல படம் மக்களே கண்டிப்பாக பாருங்கள் 🔥🔥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Alienist – ஏலியனிஸ்ட் – Season 1 (2018)Alienist – ஏலியனிஸ்ட் – Season 1 (2018)

இது 1890 – களில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடப்பது போன்ற தொடர்.  சைக்காலஜிஸ்ட் என்று ஒரு மருத்துவ பிரிவு வருவதற்கு முன்பு மனநோய்க்கு ஆளான மக்களுக்கு வைத்தியம் பார்ப்பவர்கள் தான் ஏலியனிஸ்ட்.  தொடரின் கதைக்கு வருவோம். படத்தின் ஆரம்பத்தில் ஒரு

Karthikeya-2014Karthikeya-2014

Karthikeya Telugu Movie Review  இது ஒரு தெலுகு mystery thriller.  சுப்ரமணியபுரம் என்ற ஊரில் உள்ள முருகன் கோவிலில் நடந்த மரணங்களால் மூடப்படுகிறது. இதனை பற்றி பேசுபவர்கள் பாம்பு கொத்தி இறந்து விடுகிறார்கள்.  Tamil ❌ Telugu ✅ Available

Heavenly Creatures – 1994Heavenly Creatures – 1994

Heavenly Creatures Tamil Review  இரண்டு ஸ்கூல் புள்ளைங்க நல்ல ப்ரண்ட்ச் ‌‌. இவங்க ப்ரண்ட் ஷிப் கொஞ்சம் எல்லை மீறி போகுதுனு நினைக்கிறார்கள் இருவருடைய பெற்றோர்களும். அதனால் இவர்களை பிரிக்கனும் என்று முடிவு செய்கிறார்கள்.  IMDb 7.3 Tamil dub