The Witch : Part 1- The Subversion

The Tiger பட டைரக்டர் மற்றும் I saw the devil படத்தின் Writer ஆன Park Hoon – Jung ன் மறறொரு தரமான படம். 

நல்ல ஒரு மர்மம் கலந்த கொரியன் ஆக்சன் படம். வன்முறைக் காட்சிகள் ரொம்பவே அதிகம். 

IMDb 7.2

Tamil dub ❌

Available @Primevideoin

படம் ஆரம்பமே குழந்தைகளை கொல்வது போல கொடூரமான காட்சிகளுடன் தொடங்குகிறது. அதில் ஒரு சிறுமி மட்டும் தப்பித்து குத்துயிரும் கொலை உயிருமாக பக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் விழுந்து மயங்குகிறார். 

படம் 10 வருடம் முன்னோக்கி செல்கிறது. அதே வீட்டில் வளர்ப்பு மகளாக வளர்க்கிறார் அந்த பெண். அழகான குடும்பம், நண்பி என போய்க்கொண்டு இருக்கும் வாழ்க்கையில் பணப்பிரச்சினை காரணமாக ஒரு டிவி ப்ரோக்ராம்மில் கலந்து கொள்கிறார். 

அதற்கு அப்புறம இரண்டு குரூப்புகள் இவளை சுற்றி சுற்றி வந்து தொல்லை தருகிறார்கள். இவளைச் சுற்றி பல மர்மங்கள் இருக்கிறது என்று தெரிகின்றது. 

யார் இந்த பெண்? எதற்காக பல குரூப்புகளால் தேடப்படுகிறார், அவரைச் சுற்றி உள்ள மர்மங்கள் என்ன என்பதை பல எதிர்பாராத ட்விஸ்களுடன் ரத்தக்களரியாக சொல்கிறது படம். 

படம் முதல் ஒரு மணி நேரம் மெதுவாக செல்கிறது. ஒவ்வொரு கேரக்டருக்கும் Solid base மற்றும் கேரக்டர் டெவலப்பன்ட் செய்யப்படுகிறது.  கடைசி ஒரு மணி நேரம் பரபரவென போகிறது படம். 

ஹீரோயின் செமயாக கலக்கி இருக்கிறார். முதல் பாதியில் அவ்வளவு க்யூட்டாக வருபவர்‌ இரண்டாவது பாதியில் விஸ்வரூபம் (விஸ்வரூபம் டிரான்பர்மேஷன் சீன் மாதிரி ஒன்னு இருக்கு)  எடுக்கிறார்.நல்ல Expression கொடுக்கும் கண்கள் அவருக்கு,

நல்ல படம் கண்டிப்பாக பார்க்கலாம் 👍👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ஃபௌடா (Fauda) – சீசன் (Season 1)ஃபௌடா (Fauda) – சீசன் (Season 1)

ஃபௌடா (Fauda)  – சீசன் (Season 1)    இது இஸ்ரேல் நாட்டில் இருந்து வந்த தொடர்.  இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடர்.      இஸ்ரேல் அரசாங்கத்திற்கும் பாலஸ்தீன புரட்சியாளர்களுக்கும் நடுவே நடக்கும் சம்பவங்களை

#Alive – #அலைவ் (2020)#Alive – #அலைவ் (2020)

 இது கொரியாவில் இருந்து வந்த ஜாம்பி திரைப்படம். ஆனால் மொத்தமாக ஜாம்பியை மற்றும் நம்பாமல் கொஞ்சம் எமோஷனல் விஷயங்களையும் கலந்து கொடுத்து உள்ளனர்.  இது சர்வைவல் பற்றிய திரைப்படம். சுற்றி இருப்பவர்கள் அனைவரும் ஜாம்பியாக மாறி நாம் மட்டும் தனித்து விடப்பட்டால்

13 in 1 – Solar Robot Kit for Kids13 in 1 – Solar Robot Kit for Kids

13 in 1 – Solar Robot Kit for Kidsபையனுக்கு கிஃப்ட்டா வந்தது. நல்லா டைம் பாஸ் ஆகுது அவனுக்கு. ரேட்டிங் ⭐⭐⭐.5/5 போட்ருக்கு.ரேட்டிங் ஓகே தான்.. ஆனா எனக்கு என்னமோ வொர்த்தா தான் தெரியுது.விலை : 899 ரூபாய்.