Only The Brave – 2017

ஒரு தீயணைப்பு குழுவை பற்றிய உண்மைச் சம்பவங்களை தழவி எடுக்கப்பட்ட படம்.  குறிப்பாக 2013 ஆம் ஆண்டு நடந்த ஒரு  சம்பவத்துடன் படம் முடிகிறது. 

IMDb 7.6
Tamil dub ❌
OTT ❌
படம் ரொம்பவே நீளம் ஆனா கடைசில அழுக வைச்சுருவாங்க. 
குழுவில் மொத்தம் 20 பேர் இருந்தாலும் இரண்டு பேரை சுற்றி நகர்கிறது. 
ஒருவன் போதைக்கு பழக்கத்தில் இருந்து மீள முயற்சிக்கும் இளைஞன் தீயணைப்பு குழுவில் சேருகிறான். 
இன்னொருவர் அந்த குழுவின் தலைவர். 
இந்த குழுவின் பயிற்சி, குடும்பம், எவ்வாறு தீயை அணைக்கிறார்கள் என்பதை சுற்றி நகர்கிறது படம்.
இந்த குழுவின் வேலை காட்டுத்தீ பரவும் போது ப்ளான் பண்ணி தடுத்து நிறுத்துவது. உதாரணமாக பரவும் வழியில் உள்ள மரங்களை வெட்டி தீ பரவாமல் தடுப்பது ‌‌ . 
ஒரு காட்டுத்தீ எதிர்பாராத விதமாக பரவி ஒரு ஊரை அழித்து விடும் அளவிற்கு மிரட்டுகிறது. இதனை அணைக்க நம்ம குழு செல்கிறது. தீயை அணைப்பதில் வெற்றி பெற்றார்களா என்பதை படத்தில் பாருங்கள். 
பெரிய திருப்பங்கள் இல்லாமல் மெதுவாக சென்றாலும் கடைசி 30 நிமிடங்கள் அருமை . 
ரொம்பவே சோகமான க்ளைமேக்ஸ் , அழ வைச்சுட்டானுக. 
நல்லா வித்தியாசமான படம் கண்டிப்பாக பாருங்கள் 👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Ponniyin Selvan – 2Ponniyin Selvan – 2

 பொன்னியின் செல்வன் – 2  ⭐⭐⭐.75/5  படம் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது.  நாவலில் இருந்து நிறையவே மாற்றங்கள் செய்து கிடைத்த 3 மணி நேரத்தில் பெரும்பாலான முக்கிய கதாபாத்திரங்களுக்கு closure கொடுத்து அவர்களின் பிண்ணனி கதை சொல்லி முடித்து இருக்காங்க

Pothanur Thabal Nilayam – 2022Pothanur Thabal Nilayam – 2022

ஒரு டீசன்ட்டான Heist படம். 1990 களில் நடப்பது போன்று பக்காவாக எடுக்கப்பட்டுள்ளது.  முதல் பாதி கொஞ்சம் இழுவை , இரண்டாவது பாதி ரொம்ப நல்லா இருந்தது.  அறிமுக இயக்குனர் + படத்தின் ஹீரோ உண்மையாக நடந்த சம்பவத்தின் அடிப்படையில் இந்த

Where The Crawdads Sing-2022Where The Crawdads Sing-2022

ஒரு பெரிய சதுப்பு நிலம் அதுல தனியா வீடு அதுல  ஒரு பொண்ணு மட்டும் வசிக்குது. அந்த பொண்ணோட முன்னாள் காதலன் ஒரு நாள் இறந்து கிடக்கிறான்.‌ கொலை செய்தது யார் ? என்பதை சுற்றி நகர்கிறது படம். IMDb 7.1