இது ஒரு ஜப்பானிய low budget ஜாம்பி ஹாரர் + காமெடி படம்.
IMDb 7.6
Tamil dub ❌
OTT ❌
ஜாம்பி பட ஷீட்டிங் எடுக்க பாழடைந்த பங்களாக்கு போகும் குரூப் உண்மையான ஜாம்பிகள் கிட்ட சிக்குற கதை தான்.
என்னடா பழைய கதையா இருக்குனு நினைக்காம பாருங்க செம ட்விஸ்ட் இருக்கு.
பாழடைந்த பில்டிங்கு சூட்டிங் போறாங்க ஒரு குரூப். அங்க போனப்பறம் தான் தெரியுது அது மனிதர்களை வச்சு கொடூரமான ஆராய்ச்சி பண்ணிய பழைய கட்டடம் என்று .
கூட வந்த குழுவில் உள்ளவர்கள் ஒவ்வொருத்தராக ஜாம்பியாக மாற கடைசியில் ஹீரோயின் தப்பிப்பது தான் படம்.
இந்த கதை அரை மணி நேரத்தில் முடிந்து விடுகிறது. அதுக்கு அப்புறம் வர்ற ஒரு மணி நேரம் செமயா இருக்கும்.
அதுவும் கடைசி அரைமணி நேரம் விழுந்து விழுந்து சிரிக்கலாம்.
கண்டிப்பாக பாருங்கள் 👍👍
Watch Trailer: