பிரபல இயக்குநர் Stanley Kubrick இயக்கத்தில் 1968 ல் வெளிவந்த ஒரு Sci Fi , Adventure படம் இது.
படத்தோட தரமான மேக்கிங்காகவே படத்தை பார்க்கலாம்.
IMDb 8.3
Tamil dub ❌
91 Of Top 250 movies
படத்தின் கதை மூன்று லேயர்களாக உள்ளது.
படம் ஆப்பிரிக்காவில் ஒரு வறண்ட பிரதேசத்தில் ஆரம்பிக்கிறது. அங்குள்ள மனித குரங்குகள் கூட்டத்தின் வாழ்க்கையை காட்டுகிறது. அங்கு திடீரென ஒரு கருப்பு பலகை மண்ணுக்குள் இருந்து வருது. அதை இந்த குரங்கு கூட்டம் ஆச்சர்யமாக தொட்டுப் பார்க்கிறது. அங்கு நடக்கும் ஒரு முக்கியமான சம்பவத்துடன் அந்த பகுதி கதை நிறைவடைகிறது.
அடுத்த பகுதி நிலாவில் உள்ள மனித காலனியில் நடக்கும் கதை. அங்கும் ஒரு முக்கியமான சம்பவத்துடன் முடிகிறது.
மூன்றாவது ஜூபிடர் கிரகத்தை நோக்கி பயணிக்கும் ஒரு குழுவை பற்றியது. இநதக்குவை வழி நடத்துவது HAL 1000 எனப்படும் அதி நவீன சூப்பர் கம்ப்யூட்டர்.
இந்த மூன்று கதைகளுக்கும் உள்ள தொடர்பு என்ன ? இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பதை படத்தில் பாருங்கள்.
1967 ல இந்த மாதிரி யோசித்து இப்படி ஒரு படம் பண்ணி இருக்கிறார் என்பதை நினைக்கும் போதே பிரமிப்பு ஏற்படுகிறது.
என்ன மாதிரியான ஒரு கிராபிக்ஸ், செட்டிங்குககள் மற்றும் கேமரா ஒர்க்.
ஆனால் படம் செம ஸ்லோ. வேண்டும் என்றே மெதுவாக நகருட்டும் என்றே எடுத்த மாதிரி உள்ளது. 1960 களில் வந்த படத்தை மெதுவாக போகிறது என்று குற்றம் சொல்ல முடியாது.
இப்ப கூட கொஞ்சம் டிங்கரிங் பண்ணி ரிலீஸ் பண்ண பழைய படம் என்று கண்டுபிடிக்க முடியாது. டெக்னிக்கலாகவும் சரி கதையும் சரி ரொம்பவே அட்வான்ஸ்டு.
சினிமா ரசிகர்கள் மற்றும் Sci Fi ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு படம்.