Disney வெளியிட்டு இருக்கும் அனிமேஷன் படம்.
13 வயசு பொண்ணு தான் ஹீரோயின். அவ excite ஆனா பெரிய சிவப்பு பாண்டாவா மாறிடுவா.
ஏன் இப்படி ஆகுது ? இதிலிருந்து எப்படி மீண்டு வந்தா என்பது தான் படம்.
ஹீரோயினுக்கு 4 நண்பிகள். இவர்களுடைய முக்கிய குறிக்கோள் ஒரு மியூசிக் கான்செர்ட்டுக்கு போறது. வீட்டுல விடாததுனால இந்த பாண்டாவ மாறும் திறமையை யூஸ் பண்ணி பணம் சேர்க்கிறார்கள்.
ஹீரோயின் குடும்ப வழியில் உள்ள ஒரு பிரச்சினையால் தான் இந்த பாண்டாவாக மாறும் பிரச்சினை வருகிறது. அதற்கு ஒரு பூஜை பண்ண வேண்டும் ஆனால் அடிக்கடி பாண்டா வெளிவந்தால் இவளை அந்த பாண்டா முழுவதுமாக ஆக்கிரமித்து கொள்ளும்.
இந்த பிரச்சினைகளில் இருந்து வெளியே வந்து கான்செர்ட் போனார்களா என்பதை படத்தில் பாருங்கள்.
படம் எனக்கு தெரிஞ்சு சுமார் தான். கொஞ்சம் ஸ்லோவா போச்சு. ஆனால் குழந்தைகளுக்கு மற்றும் பெண்களுக்கு கண்டிப்பா ரொம்பவே பிடிக்கும் .
பாண்டாவோட அனிமேஷன் ரொம்பவே நல்லா இருந்தது.
கண்டிப்பாக குடும்பத்தோட ஒரு முறை பார்க்கலாம்.