CTRL+F9

நண்பரின் DM பற்றிய ஜோக் படிக்கும் போது ஞாபகம் வந்தது. இத போஸ்ட் பண்ணிருக்கனு தெரியல. ரீ போஸ்ட்டா கூட இருக்கலாம். 

இது நான் காலேஜ் படிக்கும் போது நடந்த சம்பவம். கொஞ்சூண்டு டெக்னிக்கல். 
இது என்னுடைய கல்லூரியில் முதல் வருடம் நடந்தது.
நாங்கள் படித்ததும் சுமாராகத்தான் அதனால் மேனேஜ்மெண்ட் கோட்டா தான் கிடைத்தது. நான் படித்தது கணிப்பொறி அறிவியல் குரூப்.
முதல் வருடத்தில் ‘C’ மொழி பாடத்திட்டத்தில் இருந்தது. அதற்கான செய்முறை பயிற்சி வகுப்புகளும் உள்ளது.
ஒருநாள் மதியவேளையில் முதல்முறையாக கம்ப்யூட்டர் சயின்ஸ் லேபிற்கு கூட்டிச் சென்றனர். எங்களின் பாதி நபர்களுக்கு அதுதான் முதல் கம்ப்யூட்டர் அனுபவம்.
ஒரு எளிதான புரோகிராம் வகுப்பில் போர்டில் எழுதி அதை நோட்டில் காப்பி செய்து பின்புதான் லேப்புக்குள் அனுமதித்தனர்.
எங்களுடைய வேலை அதை கம்ப்யூட்டரில் டைப் செய்து கம்பைல் மற்றும் ரன் செய்வது
அனைவரும் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து தட்டச்சு செய்ய ஆரம்பித்தோம் .
பெரும்பாலானவர்களுக்கு முதல்முறையாக ஒவ்வொரு எழுத்தாக அடிக்க ஆரம்பித்தோம்.
எங்கள் நண்பர்களில் ஒருவன் மிகவும் ஆர்வக்கோளாறு. கோடைகால விடுமுறைகளில் தட்டச்சு பயிற்சி சென்றிருப்பான் போல கடகடவென்று தட்டச்சு செய்து முடித்துவிட்டான்.
இப்போது தட்டச்சு முடிந்த மாணவனுக்கும் ஆசிரியருக்கும் இடையேயான உரையாடல்.
நண்பன்: சார் சார் இங்க வாங்க சார். நான் ப்ரோக்ராம் டைப் பண்ணி முடித்துவிட்டேன்
ஆசிரியர்: சூப்பர்டா எப்படி இவ்வளவு சீக்கிரம் டைப் பண்ணிட்ட
நண்பன்: (பெருமையுடன்) நான் டைப்பிங் கிளாஸ் போய் இருக்கேன் சார்.
ஆசிரியர்: வெரிகுட்.. சரி ப்ரோக்ராமை ரன் பண்ணு
நண்பன்: திருதிருவென விழித்துக் கொண்டு அது எப்படி சார் பண்றது.
ஆசிரியர்: இது கூட தெரியாதாப்பா இப்பதானே வகுப்பில் சொல்லிக்கொடுத்தேன்.
சரி கீ போர்டில் கண்ட்ரோல் எப் நைன் (CTRL+F9) ப்ரஸ் பண்ணு
நண்பன்: வலது கையில் நோட்டு இருக்க, இடதுகை பெருவிரலால் CTRL பட்டனை அமுக்கி கொண்டு, சுட்டு விரலால் F கீயை அமுக்கி கொண்டு சார் அந்த 9 கீயை ப்ரஸ பன்னுங்க. 
புரியலன கம்ப்யூட்டர் கீ போர்ட நன்றாக ஒருமுறை பாருங்கள். 
ஆசிரியர் முகத்தில் ஈ ஆட வில்லை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Gold Investment IdeasGold Investment Ideas

Gold Investment Ideas பல்வேறு Gold Investment சாய்ஸ்கள்.. நிறைய பேர் DM ல Gold Investment பத்தி கேட்டீங்க.  1. வயசு 30 க்குள்ள இருந்தா Gold Investment பண்ணாம ஸ்டாக்ல போடுங்க.  2. SGB – பாதுகாப்பான ஒன்று.8

My Favourite Trip- parambikulam, Thunakkadavu Tree HouseMy Favourite Trip- parambikulam, Thunakkadavu Tree House

My Favourite Trip- parambikulam, Thunakkadavu Tree House & Tree Top Stay சில சுற்றுலா பயணங்கள் மறக்க முடியாதபடி அமையும் . அது மட்டுமல்லாமல் மீண்டும் போக வேண்டும் என்ற ஒரு ஆவலைத் தூண்டும். 2017 மார்ச் மாதத்தில்