Stephen Spielberg ஆரம்ப காலத்தில் எடுத்த Sci Fi படம். இது தன்னுடைய கனவு படம் என்று சொல்லி இருக்கிறார்.
ஏலியன் பூமிக்கு வரும் கதை தான் . ஆனால் சொன்ன விதம் அருமை.
IMDb 7.6
#tamil dub ❌
Won 1 Oscar
படம் 3 கதாபாத்திரங்களை சுற்றி நகர்கிறது.
ஹீரோ தற்செயலாக UFO ஐ மிக அருகில் பார்த்து விட்டு அதனால் மூளை குழம்பியவாறு அலைகிறான். அவன் மனது ஒரு மலை போன்ற அமைப்பை சுற்றி சுற்றி வருகிறது.
இன்னொரு பெண்ணின் குழந்தை ஏலியன்களால் கடத்தப்படுகிறது. அந்த பெண்ணிற்கும் அந்த மலை போன்ற அமைப்பு தான் டார்கெட்.
இன்னொரு பக்கம் ப்ரெஞ்ச் விஞ்ஞானி அமெரிக்கர்களுடன் ரகசியமாக ஆராய்ச்சி பண்ணிக்கொண்டு இருக்கிறார்.
அனைவரையும் இணைக்கிறது அந்த மலை போன்ற இடம்.
அது என்ன இடம் ? ஏலியன்களின் நோக்கம் என்ன ? நல்லவர்களாக ? கெட்டவர்களா ? அவர்களுடன் எப்படி மனித இனம் தொடர்பு கொண்டது என்பதை படத்தில் பாருங்கள்.
இந்த படத்தோட ஸ்பெஷல் என்னவென்றால் கடைசி வரைக்கும் ஏலியன்கள் நல்லதா கெட்டதா என்ற சஸ்பென்ஸ்ஸில் வைத்து இருந்தது.
அருமையான Camera work.. ஆரம்பத்தில் நட்சத்திரங்களுடன் வீட்டை காட்டும் ஷாட்டுகள் எல்லாம் அருமை. Cinematography க்கு தான் ஆஸ்கார் கொடுத்து இருக்கிறார்கள்.
இன்னொரு முக்கியமான விஷயம் Special Effects . 1977 ல் வந்த படம் என்ற ஃபீல் இல்லை. அவ்வளவு சூப்பரா இருந்தது. பிரபா மாம்ஸ் remastered version கொடுத்தார். சூப்பராக இருந்தது.
Contact, Arrival படங்கள் பிடிக்கும் என்றால் கண்டிப்பாக பாருங்கள். கொஞ்சம் நீளமான பட் தான்.
Director: Steven Spielberg
Cast: Richard Dreyfuss, François Truffaut, Teri Garr, Melinda Dillon, Bob Balaban, Cary Guffey
Screenplay: Steven Spielberg
Cinematography: Vilmos Zsigmond
Music: John Williams