முதலில் போட்ட த்ரெட்டுக்கு பயங்கரமான ரெஸ்பான்ஸ்.. அதனால் அப்படியே இரண்டாவது Series favorite list யையும் தொடரலாம் என்று நினைக்கிறேன்.
மறுபடியும் சொல்கிறேன் இது ரேங்கிங் இல்லை. நான் எனக்கு தோணுற ஆர்டர்ல லிஸ்ட் பண்ணிருக்கேன். எந்த தொடருக்கும் தமிழ் டப் இருக்குற மாதிரி தெரியவில்லை.
Stranger Things : IMDb 8.7
பெயருக்கு ஏற்ற மாதிரி புதுமையான ஒரு தொடர். Netflix தயாரித்து சத்தமே இல்லாமல் வந்து பெரிய அளவில் ஹிட் அடித்த தொடர். பெரிய நடிகர்கள் என்று யாரும் கிடையாது .. சின்ன சின்ன பசங்க தான் நடிச்சு இருப்பாங்க.
சின்ன ஊரில் ஒரு பையன் திடீரென காணாமல் போய் விடுவான்.ஆனால் அவனை கடத்தியவர்கள் அவனை இன்னொரு Dimension ல் வைத்து இருப்பார்கள்.
அவனது அம்மா, நண்பர்கள், போலீஸ் என அனைவரும் அவனை கண்டுபிடித்தார்களா என்பதை பற்றிய தொடர்.
இன்னும் பார்க்கவில்லை என்றால் கண்டிப்பாக பாருங்கள். செம் Engaging ஆக இருக்கும்.
Available in Netflix
Suits: IMDb 8.4
இது அமெரிக்காவில் உள்ள இரண்டு திறமையான லாயர்களை சுற்றி நடக்கும் கதை.
ஒருவர் கொஞ்சம் சீனியர் லாயர் . இவர் தனக்கு அஸிஸ்ட்டன்ட் வேண்டும் என இண்டர்வியு எடுப்பார் அப்போது போதை பொருள் கடத்தும் ஒருவன் போலீஸ்க்கு பயந்து இண்டர்வியு ரூமுக்குள் வந்து விடுவான். அவன் கல்லூரிக்கு போனதில்லை ஆனால் சட்டத்தை புத்தகம் மூலமாக படித்து மற்ற மாணவர்களுக்கு பதிலாக தான் நுழைவு தேர்வு எழுதுவான்.
அவன் திறமையானவனாக இருக்க வேலைக்கு சேர்த்துக் கொள்கிறான் சீனியர். ஆனால் கம்பெனி பாலிஸி படி Harvard University ல் law படித்திருக்க வேண்டும்.
சீனியருக்கு அவனை பிடித்து போக இருவரும் சேர்ந்து தில்லு முல்லு வேலை பார்த்து வேலையில் சேருகிறார். அதற்கு அப்புறம் பல சிக்கலான கேஸ்களை தீர்க்கிறார்கள். அவர்கள் சந்திக்கும் கேஸ்கள், சவால்கள் தான் தொடர்.
நல்ல சீரிஸ் ஆனால் சட்ட திட்டங்கள் பற்றிய நிறைய நுணுக்கமான விஷயங்களை சொல்வார்கள். இதில் நடித்த ஒரு நடிகை தான் British இளவரசி ஆனார்.
Available in Prime Video
Sacred Games: IMDb 8.6
ஒரு மிகப்பெரிய கடத்தல் மன்னன் மற்றும் பல நாடுகளில் குற்றவாளிகள் பட்டியலில் உள்ள ஒரு கொடூரமான கேங்ஸ்டர் திடீரென ஒரு நாள் மும்பைக்கு வருவான்.
ஒரு Bunker ல உக்கார்ந்து கொண்டு ஒரு போலீஸ் அதிகாரிக்கு ஃபோன் பண்ணி மும்பை இன்னும் கொஞ்சம் நாள்ல அழியப் போகுது முடிஞ்சா காப்பாத்திக்கோ என்று சொல்லுவான்.
யார் இந்த தாதா ? யாரு அந்த போலீஸ் ? இருவருக்கும் என்ன சம்பந்தம் ? மும்பையை காப்பாற்றினார்களா என்பதை தொடரில் பாருங்கள்.
போலீஸாக Saif Ali Khan, கேங்ஸ்டராக Nawazuddin Siddiqui இருவரும் கலக்கி இருப்பார்கள்.
Radhika Apte ஒரு குட்டி கேரக்டரில் அருமையாக நடித்து இருப்பார்.
செம சஸ்பென்ஸ்ஸா போகும் தொடர் . கொஞ்சம் அதிகமாக பேசுவாங்க ஆன ஒகே தான்.
Dexter : IMDb 8.6
பல சீரியல் கில்லர் தொடர்கள் மற்றும் படங்கள் பார்த்து இருப்போம். ஆனால் இதில் ஹீரோவே ஒரு சீரியல் கில்லர் அவன் கொலைவெறியை மற்ற சீரியல் கில்லர்கள் மற்றும் கொடூர குற்றவாளிகளை கொன்று தீர்த்து கொள்பவன் தான் Dexter.
தரமான Crime Series கண்டிப்பாக பாருங்கள்.
மேலும் இந்த தொடரை பற்றி படிக்க : https://www.tamilhollywoodreviews.com/2021/04/series-dexter-all-seasons-2006-2021.html
Available in Prime Video
Into the badlands : IMDb 8
இது உலகம் அழிந்து போன பின்பு நடப்பது போன்று உருவாக்கப்பட்ட ஒரு தொடர்.
தொடரில் துப்பாக்கி கலாசாரம் கிடையாது, பழைய மாடல் கார்கள் மற்றும் பைக்குகள் வருகின்றன, சண்டைக்காட்சிகள் முழுவதும் தற்காப்புக் கலைகளை உபயோகப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அமானுஷ்யம் கலந்த விஷயங்களும் தொடர் முழுவதும் உள்ளது. பெரும்பாலும் சண்டைக்காட்சிகளில் வாள், கம்பு, கத்தி போன்ற ஆயுதங்கள் உபயோக படுத்தப்பட்டுள்ளது.
மொத்தத்தில் ஆக்ஷ்ன் படங்கள் மற்றும் தொடர்கள் விரும்பும் ரசிகர்கள், ஒரு வித்தியாசமான தொடர் பார்க்க நினைப்பவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்
மேலும் தெரிந்து கொள்ள: https://www.tamilhollywoodreviews.com/2020/09/into-badlands-2015-2019.html
Available in Prime Video