Mutual Funds – Basics

Mutual Funds – Basics

நான் Expert கிடையாது. இந்த த்ரெட் என்னுடைய அனுபவம் மட்டுமே. MF – ல் முதலீடு செய்வதற்கு எக்கச்சக்கமான வழிகள் மற்றும் App கள் உள்ளன.  இது ஒரு அறிமுகம் மட்டுமே அதனால் நன்றாக படித்து தெரிந்து கொண்டு முதலீடு செய்யுங்கள். 

MF கள் பங்கு சந்தையில் உள்ள பங்குகளில் தான் முதலீடு செய்வார்கள். பங்கு சந்தை என்றாலே ரிஸ்க் தான். 

Mutual funds Basics in tamil, பரஸ்பர நிதி என்றால் என்ன , amc, mutual fund investments, how to start investment, basis of investment in tamil.

நீங்கள் கேட்கலாம் அப்படினா நம்மளே நேரடியாக பங்கு சந்தையில் Stocks ல் முதலீடு செய்யலாமே என்று? 

கண்டிப்பாக நீங்களே செய்யலாம். ஆனால் அது அவ்வளவு சுலபம் அல்ல. சரியான கம்பெனியை தேர்ந்து எடுத்து முதலீடு செய்வது லேசுபட்ட காரியம் அல்ல. 

MF களை நிர்வகிக்கும் AMC சொல்ற dealing ரொம்ப சிம்பிள் …நீ காச மட்டும் கொடு நான் Expert ஐ வச்சு எந்த ஸ்டாக் எப்ப வாங்கணும் விக்கணும்னு முடிவு பண்ணிக்கிறேன். இந்த சேவைக்கு எங்க கம்பெனிக்கு ஒரு அமௌன்ட கொடுத்துரு என்பது தான் அந்த டீலிங். 

நான் ரொம்ப ரிஸ்க் எடுக்க விருமபல என்று சொன்னால் அதற்கு என்று சில MF(Large Cap, Blue Chips)  இருக்கும். 

நான் ரிஸ்க் எடுக்க போறேன் என்றால் அதற்கு ஏற்ற MF ஆப்சன்கள் (Small Cap, Mid Cap)  தருவார்கள். 

MF களில் invest செய்வதை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.

அதற்கு முன் இரண்டு மூன்று முக்கிய வார்த்தைகளை பார்த்து விடுவோம் முதலில். 

AMC – MF ஐ மேனேஜ் பண்ணுற கம்பெனி தான் AMC . ICICI, Axis, HDFC, Mirae Asset னு நிறைய கம்பெனிகள் இருக்கு.

NAV – Net Asset Value – சிம்பிளா சொல்லனும்னா மொத்த MF மதிப்பையும் யும் சமமான தனித்தனி யூனிட்டா பிரிஞ்சா எவ்வளவு வருமோ அதான் NAV. 

இது டெய்லி மார்க்கெட் மற்றும் அந்த MF முதலீடு பன்னிருக்க கம்பெனிகள் பங்குகளை பொறுத்து மாறுபடும். அந்த MF மொத்த மதிப்பு என்று சொல்லலாம்.

Total Expense Ratio: 

இந்த AMC நம்ம பணத்தை சரியான பங்குகளில் முதலீடு பண்ண உதவுற expert சம்பளம் , அந்த Fund ஐ நடத்த ஆகும் செலவுகள் தான் இந்த TER. ஒவ்வொரு ஃபண்ட்க்கும் இது மாறுபடும். அந்த செலவை நம்ம கட்டுற பணத்துல இருந்து எடுத்துக்குவாங்க.  இது ரொம்ப முக்கியமான ஒன்று நீண்டகால முதலீடுகளில் இந்த ratio முக்கிய பங்கு வகிக்கிறது. 

Index Fund களில் இந்த ratio குறைவாக இருக்கும். 

Indirect Mutual Fund: 

இது நம்ம ஏஜன்ட் வழியா LIC பாலிசி வாங்குவது மாதிரி.  ஏஜன்ட்க்கு கமிஷன் கொடுக்கும் தொகையும் நம்மிடம் இருந்து வசூலிக்கப்படும். 

அவங்களே ஒவ்வொரு ஃபண்ட் பத்தியும் சொல்லி உங்களுக்கு ஏற்ற ஃபண்ட்யை பரிந்துரை செய்வார்கள். 

Paper work அனைத்தையும் அவர்களே பார்த்துக் கொள்வார்கள். நமக்கும் AMC க்கும இடையே தரகர்களாக செயல்படுவார்கள். 

எனக்கு reasearch பண்ண நேரம் இல்லை ஆனால் MF ல் முதலீடு பண்ண விருப்பம் என்றால் நேரடியாக ஏஜன்ட்களை அணுகலாம். 

Direct Mutual Fund : 

இது AMC ல் நேரடியாக முதலீடு செய்வது. 

நீங்கள் மூன்று AMC  ஃபண்ட்களில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் மூன்று AMC களை தனித்தனியாக அணுக வேண்டும். 

இதனை எளிதாக்க வந்த App கள் தான் Coin, Groww போன்றவை. 

இவற்றில் சில பட்டன் கிளிக்கில் எளிதாக எத்தனை ஃபண்ட்டுகளை எத்தனை AMC களிடம் இருந்து வாங்கலாம் மற்றும் SIP களை செட்டப் செய்யலாம். இடைத்தரகர்கள் கமிஷன் மிச்சமாகும் ஆனால் App கள் கொஞ்சம் கமிஷன் கேட்கும். 

நல்ல Research பண்ணிட்டு , MF களை பற்றி நன்கு தெரிந்து கொண்டு Direct முதலீடு ஆரம்பிப்பது நல்லது. 

அடுத்த திரட்டில் Zerodha, Coin App கள் மற்றும் Coin – App ல் எவ்வாறு MF களை வாங்குவது, விற்பது , SIP செட்டப் செய்வது பற்றி பார்க்கலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Day Trading – BasicsDay Trading – Basics

Day Trading – Basics இந்த போஸ்ட் Day Trading பண்ணுங்கனு சொல்றதுக்கு இல்ல. சில பேர் புதுசா டே டிரேட் பண்ணலாம்னு நெனப்பாங்க ஆன அத பத்தி எங்க படிக்கிறதுனு தெரியாம இருப்பாங்க.  ஆர்வத்துல காசு தொலைக்கவும் வாய்ப்பு இருக்கு.

SmallCase – Good Tool For InvestersSmallCase – Good Tool For Investers

Zerodha – Small Case’nu ஒரு tool வச்சுருக்காங்க. Stock ல  Invest பண்ண ஆரம்பிக்கிறவங்களுக்கு இது ஒரு அருமையான app.  இந்த ஆஃப் யூஸ் பண்ணனும்னா Zerodha அக்கௌன்ட் இருந்தா வசதி. ஆனா இப்ப ப்ரோக்கர்ஸ் எல்லாருமே Zerodha கூட