Seven Psychopaths – 2012

Seven Psychopaths Tamil Review 

இது ஒரு க்ரைம் ,  டார்க் காமெடி திரில்லர் படம்.

3 Billboards Outside Ebbing பட டைரக்டரின் இன்னொரு படம் தான் இது.
IMDb 7.2
தமிழ் டப் இல்லை. 
Seven Psychopaths movie review in tamil, threw Billboards Outside Ebbing director movies, dark comedy movie review, psychopath movies, psycho gangster

ஒரு ஹாலிவுட் திரைக்கதை எழுத்தாளர் Marty . Seven Psychopaths என்று ஒரு கதை எழுதுகிறார். 
அவருக்கு திடீரென  மைண்ட் ப்ளாக் ஆகிப்போச்சு அதுனால கதையை தொடர‌ முடியவில்லை. 
எழுத்தாளரின் நண்பன் Billy . Billy ன் பிஸினஸ் பார்ட்னர் Hans.  Billy and Hans இரண்டு பேரோட வேலை நாய்களை கடத்துவது. நாயோட ஓனர் நாய காணோம்னு கம்ளெய்ன்ட் கொடுத்த உடனே ஓனர்ட்ட கொண்டு போய் கொடுத்து காசு வாங்குவது. 
ஒரு முறை மாஃபியா கும்பல் தலைவனோட நாயை கடத்தி விடுகிறார்கள் .‌ அந்த கும்பல் தலைவன் கொடூரமான சைகோ எப்ப எவன கொல்லுவானு தெரியாது. 
Hans and Billy தான் நாயை கடத்தினார்கள் என வில்லனுக்கு தெரியவர மூவரும் ஊரில் இருந்து எஸ்கேப் ஆகிறார்கள். 
இதற்கு நடுவே ஒரு சைக்கோ மாஃபியா கும்பல் ஆள்களை கொன்று விட்டு சீட்டு கட்டின் கார்டை போட்டு விட்டு போகிறான். 
அவனையும் ஒரு சைக்கோவாக வைத்து கதை எழுதுகிறான் Marty. இரண்டாவது சைக்கோ வில்லன்.‌
மீதமுள்ள 5 சைக்கோக்கள் யார் ? வில்லனிடம் இருந்து தப்பித்தார்களா என்பதை படத்தில் பாருங்கள் .. 
படம் ரொம்பவே வயலன்டானது. எப்ப எவன் எவனை கொல்லுவான் என தெரியாது. படம் முழுக்க சைக்கோக்கள் தான். இந்த மாதிரி படத்தையும் காமெடியா எடுக்க தனி திறமை வேணும். 
படத்துல நிறைய பேசிக்கொண்டே இருக்கின்றனர். இன்னும் கொஞ்சம் சின்ன படமா இருந்து இருக்கலாம். கடைசியில் கொஞ்சம் இழுவை. மற்றபடி கண்டிப்பா பார்க்கலாம். 
Bill கேரக்டரில் Sam Rockwell, வில்லனாக Woody Harrelson செம கலக்கலாக நடித்து இருக்கிறார்கள். 
Director: Martin McDonagh
Cast: Colin Farrell, Sam Rockwell, Christopher Walken, Woody Harrelson, Abbie Cornish, Harry Dean Stanton
Screenplay: Martin McDonagh
Cinematography: Ben Davis
Music: Carter Burwell

Watch Trailer: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Deadstream – 2022Deadstream – 2022

Deadstream movie review  #horror #comedy @Shudder  Tamil ❌ ⭐⭐⭐/5 – ஒரு YouTuber views தேத்துறதுக்கு பாழடைந்த பங்களாக்கு போய் லைவ் ஸ்ட்ரீமிங் பண்றான் – ஏதாச்சயா அங்க உள்ள பேயை கிளப்பி விட அங்க இருந்து தப்பித்தானா? 

Primal Fear – 1996Primal Fear – 1996

ஒரு சர்ச் பாதிரியாரை அங்கே வேலை செய்யும் இளைஞன் ஒருவன் கொடூரமான முறையில் கொன்று விடுகிறான்.  IMDb 7.7 Tamil dub ❌ OTT ❌ போலீஸ் அவனை கைது செய்கிறது ஆனால் நான் கொல்லவில்லை என்கிறான். இவனுக்கு ஆதரவாக வக்கீலான

Read My Lips – 2001 (French)Read My Lips – 2001 (French)

Read My Lips – 2001 (French)  காது கேட்காத ஆனா உதடுகள் அசைவது  மூலமா சொல்வதை புரிந்து கொள்ளும் பெண்ணும் பெயிலில் உள்ள கைதியும் மாறி மாறி திருட்டுத்தனம் பண்ண உதவி செய்து கொள்கிறார்கள்‌.நல்ல ஒரு ரொமான்டிக் திரில்லர்  நடிப்பு