Three Billboards Outside Ebbing, Missouri – 2017

Three Billboards Outside Ebbing, Missouri – 2017 post thumbnail image

இது ஒரு டார்க் காமெடி கலந்த க்ரைம் ட்ராமா .

தமிழ் டப் இல்லை.

IMDb : 8.1

சூப்பரான படம்.. கண்டிப்பாக பார்க்கலாம்.

சிறந்த நடிப்பிற்கான பிரிவில் இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளது இந்த படம்.

Three Billboards Outside Ebbing, Missouri movie review in tamil, Three Billboards Outside Ebbing Missouri cast, 2 Academy Award winner, Frances Mcdo

இந்த படத்தின் ஒரு வரி கதை:  கொடூரமாக கற்பழிக்கப்பட்டு இறந்த மகளுக்கு நியாயம் கிடைக்க போராடும் தாயின் கதை .

படத்தின் ஆரம்பத்தில் ஒரு பெண் ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் மக்கள் அவ்வளவாக உபயோகிக்காமல் உள்ள சாலையில் காரில் செல்கிறார். அங்கு பாழடைந்த நிலையில் உள்ள அடுத்தடுத்து உள்ள மூன்று விளம்பர பேனர்களை பார்க்கிறார்.

அந்த பேனர்களை நிர்வகிக்கும் கம்பெனியிடம் சென்று ஒரு வருடத்திற்கு அந்த பலகைகளை குத்தகைக்கு எடுக்கிறார்.

” சாகும் போது கற்பழிக்கப்பட்ட பெண்ணின் வழக்கில் ஏன் ஒருத்தனை கூட கைது செய்யவில்லை Bill Willoughby ” என பெரிய சைசில் அந்த பேனரில் எழுதி வைக்கிறார்  அந்த பெண்.

Bill Willoughby அந்த ஊர் போலீஸ் தலைமை அதிகாரி. ரொம்ப நல்லவர் என மக்கள் மற்றும் சக அதிகாரிகளிடம் பேர் எடுத்தவர்.

Dixon – இன்னொரு போலீஸ் ரொம்ப கோபக்காரன் ‌‌மற்றும் குடிகாரன். தனது தலைமை அதிகாரி மீது மிகவும் மரியாதை வைத்து உள்ளான். இவ்வாறு பேனர் வைத்த பெண்ணை ஏதாவது பண்ணியே தீருவேன் என்று சுற்றுகிறான்.

பெண் வைத்த பேனரால் இந்த மூன்று பேருடைய வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள் தான் படம். மேலும் அந்த பெண்ணை கொடூரமாக கற்பழித்து கொன்றவன் யார் என்பதை கண்டுபிடித்தார்களா என்பதை படத்தில் பாருங்கள்.

சூப்பரான திரைக்கதை.. படம் ஸ்லோவாக போனாலும் எங்கேயுமே ஃபோர் அடிக்கவில்லை.

மகளை இழந்த சோகத்தில் சிரிப்பே இல்லாமல் செம டஃப் ஆன கேரக்டராக கலக்கி இருக்கிறார் Frances Mcdormand.

அதிலும் அவர் டென்ட்டிஸ்ட், சர்ச் ஃபாதர் , போலீஸ் ஸ்டேஷனில் அவர் பண்ணும் ரகளைகள் செம்ம சூப்பர்.

இன்னொரு புறம் Dixon (Sam Rockwell) எனும் அந்த போலீஸ்… சின்ன பிள்ளைத் தனமாக அம்மா பேச்சை கேட்டு நடக்கும் கேரக்டர் ஆகட்டும் கொஞ்சம் கொஞ்சமாக முதிர்ச்சி அடைந்த பின் அவர் காட்டும் நடிப்பும் டாப் க்ளாஸ்.

இந்த இரண்டு பேரும் துணை நடிகர்களுக்கான ஆஸ்கார் அவார்டை வாங்கியதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

Woody Harrelson தனக்கே உரிய பாணியில் சீஃப் போலீஸ் ஆபிசராக வருகிறார். மிகவும் அருமையான ரோல்.. அதுவும் பேனர்க்கு ரென்ட் கொடுக்கும் காட்சிகள் சிறப்பு.

நம்ம GOT புகழ் Peter Dinklage ஒரு சின்ன கதாபாத்திரத்தில் வருகிறார்.

கண்டிப்பாக பாருங்கள் .. Highly Recommended.

படம் ஸ்லோவாக தான் செல்லும் .

படம் சீரியஸான படம் என்றாலும் நிறைய ஒன் லைனர்கள் சிரிப்பை வரவைக்கும்.

இது மாதிரி எல்லாம் நம்ம ஊரு போலீஸ்ட பண்ணா அடி வெளுத்து விட்டுருவாங்க.

IMDb Rating : 8.1

Awards: 2 Academy Awards for supporting role ( Male & Female)

OTT ல் இல்லை .

DM for download link.

Director: Martin McDonagh (Seven Psychopaths)

Cast: Frances McDormand, Sam Rockwell, Woody Harrelson, Abbie Cornish, Lucas Hedges, Caleb Landry Jones, Peter Dinklage

Screenplay: Martin McDonagh

Cinematography: Ben Davis

Music: Carter Burwell

My Trailer:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Prison Break Season -3Prison Break Season -3

Prison Break Season -3 – Series Review In Tamil  சகோதரர்கள் இருவரும் ஜெயில் இருந்து தப்பி பனாமா என்னும் நாட்டுக்கு வருகிறார்கள். ஆனால் சில பிரச்சினைகளால் அந்த நாட்டில் உள்ள சோனா என்னும் சிறையில் ஒரு சகோதரர் அடைக்கப்படுகிறார். 

Kaala Paani – Dark Water ReviewKaala Paani – Dark Water Review

இது ஒரு அருமையான சர்வைவல் சீரிஸ். ⭐⭐⭐⭐.5 /57 EpisodesTamil ✅ , NetflixCan be watched with family ✅ (Very few violent scenes) ரொம்ப நாள் ஆச்சு இது மாதிரி ஒரு நல்ல சீரிஸ் பார்த்து.‌ஒரே நாள்ல

You Were Never Really Here – 2017You Were Never Really Here – 2017

 Joaquin Phoenix நடித்த ஒரு Crime Drama , படம் இது.  ஹீரோ ஒரு Ex military மேன் காணாமல் போன பெண்களை கண்டுபிடித்து கொடுப்பது தொழில். ஒரு அரசியல்வாதியின் பெண்ணை கண்டுபிடித்து கொடுத்த பின்பு அதனால் ஏற்படும் விளைவுகள் தான்