The Lighthouse – 2019

The Lighthouse Tamil Review 

இது ஒரு Horror , Mystery படம்.

1890 களில் நடப்பது போன்று எடுக்கப்பட்டு உள்ளது.

படம் முழுவதும் கருப்பு வெள்ளை மற்றும். Aspect Ratio குறைவாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. மொபைல்ல கொஞ்சமா நடு ஸ்கிரீன்ல தான் படம் ஓடுது. 

The lighthouse movie review in tamil, the lighthouse IMDb, the lighthouse horror movie, lighthouse cast, dark movie, slow burner, horror island

இரண்டு பேர் கடலுக்கு நடுவே ஒரு லைட் கவுஸ்ல இருக்காங்க. 

ஒருத்தர் சீனியர் (William Dafoe – ஒரு ஸ்பைடர்மேன் படத்துல வில்லனா வருவார்)  இன்னொருத்தர் 4 வார கான்ட்ராக்டல வேலைக்கு வருகிறார்.(  Robert Pattinson – கடைசியாக Tenet ல நடிச்சு இருந்தாரு) 

ஆரம்பத்திலுல இரண்டு பேருக்கும் ஒத்துப் போகாமல் சண்டை போட்டுட்டு இருக்காங்க. அந்த சீனியர் மட்டும் லைட் கவுஸ்க்கு மேல போய் என்னமோ பண்ணிட்டு வறாரு.  புதுசா வந்தவன கண்டபடி வேலை வாங்குகிறார். 

புதுசா வந்தவனுக்கு கனவுல கடல்கன்னி வருது , ஏதோ ஒரு கொடூரமான மிருகம் தெரியுது. 

அதுக்கப்புறம் எனக்கு படம் சுத்தமா ஒன்னும் புரியல. எது கனவு ? எது நிஜம்னு தெரியலை.. ஆனா செம டார்க்கான படம். 

படத்துல மொத்தமே 2 பேர் தான். ரெண்டு பேரும் சூப்பரா நடிச்சு இருக்காங்க. 

இன்னொரு பெரிய ப்ளஸ் பின்னணி இசை.. மிரட்டி இருக்காங்க.. அதுவும் அந்த ஹாரன் சத்தம், கடல் பறவைகள் சத்தம் அருமையாக செட் ஆகி இருக்கிறது. 

இன்னொரு முக்கியமான விஷயம் கேமரா..கருப்பு வெள்ளையில் எடுத்தது இந்த டார்ககான படத்துக்கு பக்காவா இருக்கிறது. 

படத்துல என்ன நடக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு படத்தை நகர்த்தி செல்கிறது. 

ஆன எனக்கு ஒன்னும் புரியல. 

வித்தியாசமான ஹாரர் படம் பார்க்கணும்னு நினைப்பவர்கள் பார்க்கலாம். மெதுவா போற படம் தான். 

Director: Robert Eggers

Cast: Willem Dafoe, Robert Pattinson

Screenplay: Max Eggers, Robert Eggers

Cinematography: Jarin Blaschke

Music: Mark Korven

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Trollhunter – 2010Trollhunter – 2010

இது நார்வேயில் இருந்து வந்துள்ள Sci Fi + Horror படம்.  இந்த படம் முழுவதும் Live Footage  வகையில் எடுக்கப்பட்டுள்ளது.  ஒரு கரடி வேட்டைக்காரனை பின் தொடர்ந்து வீடியோ எடுக்க முயலும் மாணவர்கள் சந்திக்கும் வித்தியாசமான அனுபவம் தான் இந்த

Deadstream – 2022Deadstream – 2022

Deadstream movie review  #horror #comedy @Shudder  Tamil ❌ ⭐⭐⭐/5 – ஒரு YouTuber views தேத்துறதுக்கு பாழடைந்த பங்களாக்கு போய் லைவ் ஸ்ட்ரீமிங் பண்றான் – ஏதாச்சயா அங்க உள்ள பேயை கிளப்பி விட அங்க இருந்து தப்பித்தானா? 

Dark – Season 2Dark – Season 2

Dark Series Review  சீசன் 1 முடிஞ்சது 2052 ல ஆனா 2வது சீசன் ஆரம்பிக்கிறது 1921.  இத பார்த்த உடனே தெரிஞ்சது இந்த சீசன்ல ரொம்பவே கவனமா பாக்கணும் என்று.  மொத்தம் 8 எபிசோட்கள் இந்த சீசனில்.  இந்த சீசன்