பிரபல இயக்குனர் Stephen Spielberg இயக்கத்தில் வந்த Sci Fi , Adventure கலந்த ஆக்ஷன் படம்.
படம் நடப்பது 2045 ல . மக்கள் நிம்மதியாக வாழ சூழல் இல்லாததால் பெரும்பாலான மக்கள் Oasis எனப்படும் Virtual உலகத்தில் பெரும்பாலான நேரத்தை கழிக்கிறார்கள்.
Oasis உலகத்தை உருவாக்கிய விஞ்ஞானி அதிபுத்திசாலி. அவர் இறக்கும் முன்பு ஒரு அறிக்கை விட்டுவிட்டு இறந்து விடுகிறார்.
Oasis – ல் ஒரு ரகசியத்தை ஒளித்து வைத்து உள்ளதாகவும் அந்த ரகசியத்தை அடைய மூன்று சாவிக்களை கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார். அந்த ரகசியத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு தன் சொத்துக்கள் மற்றும் Oasis ன் முழு உரிமையும் கொடுக்கப்படும் என்கிறார்.
சாவிக்களை கண்டுபிடிப்பதற்கான Clue தன் வாழ்க்கை வரலாற்றில் இருப்பதாகவும் சொல்கிறார்.
ஹீரோ , ஹீரோயின் மற்றும் இன்னும் 3 பேர் முதல் சுற்றில் தேர்ச்சி பெற்று சாவிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள்.
படம்னு இருந்தா வில்லன் இல்லாமலா … Oasis க்கு போட்டியாக இன்னொரு கம்பெனி இருக்கிறது. அந்த கம்பெனி ஓனர் எப்படியாவது Oasis ஓனர் சொன்ன ரகசியத்தை கண்டுபிடித்து Oasis ஐ தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயல்கிறான்.
அப்புறம் என்ன விர்ச்சுவல் உலகத்தில் நடந்த சண்டை நிஜ உலகத்திற்கும் extend ஆகுது.
கடைசியாக எந்த குரூப் Oasis ஐ தனக்கு சொந்தமாக்கி கொண்டார்கள் என்பதை படத்தில் பாருங்கள்.
படத்துல முக்கிய அம்சம் கிராபிக்ஸ். வீடியோ கேம் சம்பந்த பட்ட மற்றும் கற்பனை உலகம் என்பதால் புகுந்து விளையாடி உள்ளார்கள்.
டைனோசர், King Kong , Mortal Combat la 4 கையோட ஒருத்தன் வருவானே அவன், Zombies, Shining படம் என கலந்து கட்டி அடித்து இருக்கிறார்கள்.
கொஞ்சம் பெரிய படம் தான் ஆனால் ரொம்ப ஃபோர் அடிக்கவில்லை.
எல்லாருக்கும் பிடிக்குமா என தெரியவில்லை. வீடியோ கேம் மீது ஆர்வம் உள்ளவர்கள், Alita : Battle Angel போன்ற படம் பிடிக்கும் என்றால் கண்டிப்பாக பாருங்கள்.
Stephen Spielberg 💪💪💪💪
கண்டிப்பாக பாருங்கள்.
IMDb : 7.4
தமிழ் டப் இல்லை.
DM for download Link
Director: Steven Spielberg
Cast: Tye Sheridan, Olivia Cooke, Ben Mendelsohn, Lena Waithe, T.J. Miller, Simon Pegg, Mark Rylance, Philip Zhao, Win Morisaki
Home Release Date: 2018-07-24
Screenplay: Zak Penn and Ernest Cline, based on the novel by Ernest Cline
தி கேங்ஸ்டர், தி காப், தி டெவில் – The Gangster, The Cop, The Devil பொதுவாகவே கேங்ஸ்டர், போலீஸ், சீரியல் கில்லர் திரைப்படங்கள் பிடித்தமான ஒன்று. உலக அளவில் இவ்வகையான படங்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
Dark Series Review சீசன் 1 முடிஞ்சது 2052 ல ஆனா 2வது சீசன் ஆரம்பிக்கிறது 1921. இத பார்த்த உடனே தெரிஞ்சது இந்த சீசன்ல ரொம்பவே கவனமா பாக்கணும் என்று. மொத்தம் 8 எபிசோட்கள் இந்த சீசனில். இந்த சீசன்
Daniel Craig ஜேம்ஸ் பாண்ட்டாக நடித்த கடைசி படம். வழக்கமான உலகத்தை வில்லனிடம் இருந்து காப்பாற்றும் டெம்ப்ளேட் தான். IMDb 7.3 Tamil dub ✅ Available @Prime வழக்கமான 007 படங்களை விட சென்டிமென்ட் தூக்கலான படம். தன் மனைவி