Promising Young Women – 2020

இது ஒரு ரிவென்ஜ் படம். ஆனா நேரடியாக வெட்டு , குத்து என இருக்காது. 

ஹுரோயின் மெடிக்கல் காலேஜ் ட்ராப் அவுட். ஏதோ ஒரு பிரச்சினையில் தோழி தற்கொலை செய்து கொள்ள இவரும் அந்த காலகட்டத்தில் வெளியே வந்து விடுகிறார். 
வாழ்க்கையில் ஒரு பிடிமானமும் இல்லாமல் ஒரு காபி ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். 
இன்னொரு முக்கியமான வேலை இரவு நேரத்தில் பாரில் போதையில் இருப்பது போல் நடிப்பார். தப்பான எண்ணத்தோடு உதவி செய்ய வருபவர்களை கேவலப்படுத்தி அனுப்புவது. 
இவ்வாறு போய்க்கொண்டு இருக்கும் வாழ்க்கையில் அவளுடன் காலேஜ் ஜில் ஒன்றாக படித்தவன் அறிமுகமாகிறான். 
இருவருக்கும் பிடித்து போக லவ் பண்ண ஆரம்பித்து வெளியே சுற்ற ஆரம்பிக்கிறார்கள். 
ஒரு நாள் பேச்சுவாக்கில் தனது தோழியின் தற்கொலைக்கு காரணமானவன் வெளிநாட்டில் இருந்து அவனுடைய திருமணத்திற்காக வருவது தெரிய வருகிறது இவளது லவ்வர் மூலமாக.. 
ஏற்கனவே செம கடுப்பில் இருக்கும் ஹீரோயினுக்கு பழி வாங்கும் எண்ணம் வருகிறது.‌
பஜிவாங்குவதை தனது கூட படித்த பெண்ணுடன் ஆரம்பிக்கிறாள். அந்த பெண்ணிடம் இருந்து ஒரு வீடியோ கிடைக்கிறது. 
அதில் இன்னும் அதிர்ச்சி தரக்கூடிய விஷயஙக இருக்க முழு மூச்சில் பழிவாங்க இறங்குகிறாள்.
எவ்வாறு பழி வாங்கினாள் என்பது இன்ட்ரெஸ்டிங்கான  படம் + க்ளைமேக்ஸ். 
படத்தின் க்ளைமாக்ஸ் செமயா இருக்கும். நம்ம ஒண்ணு நினைப்போம் ஆன அது நடக்காது. அதுக்கு அப்புறம் ஒரு ட்விஸ்ட் வச்சு முடிச்சு இருப்பாங்க ‌‌
படம் சிறந்த திரைக்கதைக்கான Academy Award வாங்கியுள்ளது. 
 
படம் ஸ்லோ தான் ஆனால் என்ன பண்ண போறா ஹீரோயின் என்ற எதிர்பார்ப்புடன் நகர்கிறது. 
ஹீரோயின் தான் படம் ஃபுல்லா வருது. நன்றாகவே நடித்திருக்கிறார். 
நல்ல படம் , கண்டிப்பாக பார்க்கலாம். பரபரப்பாக செல்லும் படம் வேண்டும் என்பவர்கள் தவிர்க்கலாம். குடும்பத்துடன் பார்க்க முடியாது. 
IMDb Rating : 7.5 
OTT – ல் இருப்பது போல் தெரியவில்லை. 
தமிழ் டப் இல்லை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

The Nameless Days – 2022The Nameless Days – 2022

மாயன் காலண்டர் படி 20 வருஷத்துக்கு ஒருக்க 5 நாள் எந்த மாசத்துலயும் சேராதாம் அதுதான் Nameless days. இந்த டைம்ல மாயன் கடவுள்கள் வந்து மனிதர்களை வேட்டையாடும் என்ற கான்செப்டை வைத்து வந்திருக்கும் horror படம்.  IMDb – Not

மான்டேஜ் (Montage) – 2013மான்டேஜ் (Montage) – 2013

மான்டேஜ் (Montage) – 2013 கொரிய சட்டத்தின்படி 15 வருடங்களுக்குள் ஒரு வழக்கில் குற்றவாளியை கண்டுபிடித்து தண்டனை வழங்க முடியாமல் போனால், அந்த வழக்கு இழுத்து மூடப்படும். குழந்தை கடத்தப்பட்ட வழக்கு ஒன்று இதே போல்  குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால்

Duel – 1971Duel – 1971

Duel – 1971 ஒரு கிளாசிக் த்ரில்லர் from Spielberg .  ஒரு சாதாரண பிஸினஸ் மேன் ரோட்ல போறப்ப ஒரு ராட்சச ட்ரக்க முந்திட்டு போறாரு.  அந்த ட்ரக் ட்ரைவர் பெரிய சைக்கோவா இருப்பான் போல ஹீரோவ விரட்டி கொல்ல