What Happened To Monday ? – 2017

இது ஒரு இன்ட்ரெஸ்ட்டிங்கான Sci Fi படம். 

படம் 2076 – ல் ஆரம்பிக்கிறது. உலகத்தில் மக்கள் தொகை எக்குத்தப்பாக பெருகி விடுகிறது. உணவு உற்பத்தி மக்கள் தொகைக்கு போதுமானதாக இல்லாததால் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. 

ஒரு விஞ்ஞானி Dr. Nicolette Cayman (Glenn Close) ஒரு குடும்பம் ஒரு குழந்தை சட்டம் கொண்டு வருகிறார். 
இந்த சட்டத்தின் படி ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை மட்டுமே இருக்க முடியும். மீதம் உள்ள குழந்தைகள் கிரையோ ஸ்லீப் எனப்படும் மருத்துவ முறையான தூக்கத்திற்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்படுகிறார்கள். 
இந்த சிக்கலான சூழ்நிலையில் Karen Settman எனும் பெண் ஒரே மாதிரியான 7 பெண் குழந்தைகளை பிரசவித்து விட்டு இறந்து விடுகிறார். இந்த குழந்தைகளின் தாத்தா Terrence (Willem Dafoe – Spider man) அரசை ஏமாற்றி இந்த குழந்தைகளை வளர்க்க முடிவு செய்கிறார். 7 குழந்தைகள் என்பதால் இக்குழந்தைகளுக்கு கிழமைகளை பெயராக வைக்கிறார். உதாரணமாக Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday and Saturday. 
Terrance – சில விதிகளை உருவாக்குகிறார் ‌‌.  அவரவர் பெயர் கொண்ட கிழமைகளில் ஒருவர் மட்டுமே வெளியே போக வேண்டும் ‌. 
உதாரணமாக திங்கள் கிழமைகளில் Monday , செவ்வாய் கிழமைகளில் Tuesday  வெளியே போக வேண்டும் மற்றவர்கள் வீட்டில் இருக்க வேண்டும் ‌‌. வெளியே போய் திரும்பி வந்த உடன் அன்றைய நிகழ்வுகள் அனைத்தையும் மற்ற சகோதரிகள் உடன் பகிர்ந்து கொள்ள  வேண்டும்.
இதன் மூலம் அனைவரும் உயிர் வாழ்கிறார்கள். 
எல்லாரும் வளர்ந்து பெரியவர்கள் ஆகி‌விடுகிறார்கள். பேங்கில் வேலை செய்யும் Monday ஒரு நாள் வேலைக்கு போனவள் திரும்ப வரவில்லை. 
அவளுக்கு  என்ன ஆகியிருக்கும் என்று தெரியாமல் பீதி ஆகின்றனர் மற்ற 6 பேரும். அவளை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பது மீதிக்கதை. 
நல்ல ஒரு வித்தியாசமான செட்டப் உடன் ஆரம்பிக்கும் படம் நேரம் ஆக ஆக ஒரு வகையான ஆக்ஷன் படமாக மாறுகிறது.
6 பேர்களின் வேடங்களையும் ஒரே நடிகை Noomi Rapace ஏற்று நடித்துள்ளார். எல்லாரும் ஒரே மாதிரி இருந்தாலும் ஹேர் ஸ்டைல், மேக்அப், படிப்பாளியான பெண் , மூக்கு கண்ணாடி என சின்ன விஷயங்கள் மூலம் வேறுபடுத்திக் காட்டியது அருமை. ஆனால் கடைசி சண்டைக்காட்சியில் தான் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. 
மற்றபடி 2076 -ல் நடப்பதால் அந்த வருடங்களுக்கு ஏற்றவாறு காட்டப்படும் கார்கள், டின்ஏ உடன் இணைந்த துப்பாக்கி, உள்ளங்கையில் வரும் டிஸ்பிளே என சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
7 கதாபாத்திரங்கள் என்பதாலோ என்னமோ நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒருவரை போட்டுத்தள்ளி விடுகிறார் இயக்குனர். 
மற்றபடி வில்லனாக வரும் கோஷ்டி நன்றாக வில்லத்தனம் காட்டி உள்ளனர். குறிப்பாக வில்லியாக வரும் Glenn Close.
நல்ல ஒரு வித்தியாசமான Sci Fi + Thriller+ Action படம். கண்டிப்பாக பார்க்கலாம்.
IMDb Rating : 6.9/ 10
My Rating : 3.5/ 5 
Available in Amazon Prime Video
Director: Tommy Wirkola
Cast: Noomi Rapace, Marwan Kenzari, Willem Dafoe, Glenn Close, Christian Rubeck
Screenplay: Kerry Williamson, Max Botkin
Cinematography: Jose David Montero
Music: Christian Wibe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Project Power – ப்ராஜெக்ட் பவர் – 2020Project Power – ப்ராஜெக்ட் பவர் – 2020

Project Power Tamil Review ப்ராஜெக்ட் பவர் – 2020 இந்த படம் ரெண்டு நாள் முன்னாடி நெட்ஃபிளிக்ஸில் வெளியானது.  படத்தின் plot நன்றாக இருந்தது அது போக சிறந்த நடிகர்கள் வேறு. Jamie Foxx (Django Unchained,Baby Driver) மற்றும்

Homefront – ஹோம் ப்ரண்ட் – 2013Homefront – ஹோம் ப்ரண்ட் – 2013

ட்ரான்ஸ்போர்ட்டர் புகழ் Jason Statham நடித்து 2013 -ல் வந்த ஆக்ஷன் படம்.  இது போதாதென்று திரைக்கதை எழுதியவர் Sylvester Stallone. படத்தின் கதை பல வருடங்களாக அடித்து துவைத்து எடுக்கப்பட்ட குடும்பத்தை கெட்டவர்களிடம் காப்பாற்றும் கதை தான்.  Phil Broker

9 – Animated Film (2009)9 – Animated Film (2009)

எதிர்காலத்தில் உலகம் அழிந்து போன பின்பு ஒரு வீட்டின் அறையில் சாக்கு பொம்மை திடீரென உயிர் பெற்று எழுகிறது.  அதன் பின்புறம் 9 என்று எழுதப்பட்டுள்ளது.  வேளியே சென்று பார்த்தால் இருண்டு கிடக்கிறது மனிதர்கள் யாரும் இல்லை, ஒரு தாய் குழந்தையுடன்