Unhinged – அன்ஹிஞ்ட் – 2020

Gladiator பட ஹீரோ Russell Crowe நடிச்ச திரில்லர் படம் இது. அவரு வேற தாடி வைச்சு வித்தியாசமான கெட்டப்பில் இருந்ததால் பார்க்க ஆரம்பித்தேன்.

படம் டைட்டில் போடும்போதே எத பத்தினு ஒரு ஐடியா கிடைச்சது. 
ட்ராஃபிக்ல போடுற சண்டை, பொதுவாக ஒன்னுமே இல்லாத சின்ன காரணங்களுக்காக போடும் சண்டைகள்  என நிறைய காட்டப்படுகிறது.
படம் ஆரம்பத்தில் ஒரு சுத்தியலுடன்‌ஒருத்தன் ( Russell Crowe) வீட்டுக்குள்ள போறான். எல்லாத்தையும் போட்டுத்தள்ளிட்டு வீட்டையை கொளுத்தி விட்டுட்டு வேற போறான். 
அடுத்த காட்சியில் சமீபத்தில் விவாகரத்து வாங்கிட்டு தன் 15 வயது மகன் Kyle – உடன் வசித்து வரும் Rachel. இவர் தனது மகனை பள்ளியில் இறக்கிவிட காரில் செல்கிறார். 
பள்ளிக்கு மற்றும் வேலைக்கு லேட் ஆனதால் அவசரமாக செல்லுகிறார்.ஒரு சிக்னலில் க்ரீன் விழுந்தும் முன்னாடி உள்ளகாரை எடுக்காமல் இருப்பதால் ஹாரன் அடித்து திட்டுகிறார். 
முன்னாடி இருந்த கார் நகர்ந்த பாடு இல்லை. ஆனால் காரில் இருந்து இறங்கி இவர்களை நோக்க வருகிறார் Russell Crowe. நான் காரை எடுக்காதது தப்பு தான் அதுக்கு சாரி அதே மாதிரி நீயும் ஹாரன் அடிச்சு திட்டுனதுக்கு சாரி சொல்ல சொல்றார். நான் எதுக்கு சாரி சொல்லனும்னு சண்டை போட்டுட்டு எஸ்கேப் ஆகி ஒடிடுராங்க Rachel.
ஆனால் அந்த மனுஷன் கொஞ்ச தூரம் விரட்டிட்டு வருகிறார். அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு பெட்ரோல் போட காரை நிறுத்துனா அங்கேயும் வந்து விடுகிறார். Rachel மொபைலை அவளுக்கு தெரியாமல் எடுத்து விடுகிறான். அங்கிருந்து ஒருத்தன் உதவியுடன்Rachel  எஸ்கேப் ஆகி விடுகிறார். 
ஆனால் அவன் விடுவதாக இல்லை அவள்  மொபைல்லில் இருந்து அவள் வைக்கீலை வரவழைத்து ஹோட்டலில் பப்ளிக்காக கொடூரமாக கொல்கிறான். 
அடுத்த Rachel மற்றும் அவளுடைய குடும்பம் , நண்பர்கள் என ஒவ்வொருவராக கொல்லுவேன் என மிரட்டுகிறான். இதிலிருந்து எப்படி Rachel , மற்றும் அவளது மகனும் எப்படி தப்பித்தார்கள் என்பது மிச்ச படம். 
படம் முழுவதும் சேஸிங் மற்றும் வன்முறை தான். மனநிலை ஒரு நிதானத்தில் இல்லை என்றால் மனிதன் எந்த எல்லைக்கும் போவான் என்பதை சொல்கிறது படம்.
போலீஸ் எல்லாம் என்ன பண்ணுகிறது என்றே தெரியவில்லை. 
இந்த மாதிரி ஒரு சைக்கோ கேரக்டருக்கு Russell Crowe மாதிரியான திறமையான நடிகர் கொஞ்சம் overkill தான். 
பரபரப்பு + டைம் பாஸ் படம் மற்றபடி கதை என்று பெரிதாக ஒன்றும் இல்லை. 
IMDb Rating : 6.0/ 10
My Rating : 3/5
Directed by: Derrick Borte
Written by: Carl Ellsworth
Cast: 
Russell Crowe
Caren Pistorius
Gabriel Bateman
Jimmi Simpson
Austin P. McKenzie
Music: David Buckley
Cinematography: Brendan Galvin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Black Sea – ப்ளாக் ஸீ – 2014Black Sea – ப்ளாக் ஸீ – 2014

Black Sea – ப்ளாக் ஸீ – 2014 Movie Review In Tamil  இது ஒரு பிரிட்டிஷ் திரைப்படம் . இது ஒரு வகையில் Heist படம் தான். என்ன இதில் கொஞ்சம் வித்தியாசமாக உலகப்போர் சமயத்தில் மூழ்கிப் போன

The Invitation – தி இன்விட்டேஷன் – 2015The Invitation – தி இன்விட்டேஷன் – 2015

The Invitation Tamil Review  இது ஒரு அருமையான சஸ்பென்ஸ் மற்றும் கொஞ்சம் திகில் கலந்த திரைப்படம். படம் மெதுவாக நகர்ந்தாலும் அடுத்து என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பில் நம்மை வைத்து உள்ளது. இந்த எதிர்பார்ப்பே படத்தின் மிகப்பெரிய பலம்

Suzhal – The Vortex – 2022Suzhal – The Vortex – 2022

Suzhal – The Vortex – Tamil Series Review  விக்ரம் வேதா பட புகழ் புஷ்கர் – காயத்ரி உருவாக்கத்தில் கதிர் , ஐஸ்வர்யா ராஜேஸ்,ஸ்ரியா ரெட்டி மற்றும் பார்த்திபன் நடிபபில் Amazon Prime -ல் வெளிவந்துள்ள Crime Investigation