Midnight Runners – மிட்நைட் ரன்னர்ஸ் – 2017
இது ஒரு கொரியன் ஆக்ஷன் காமெடி திரைப்படம். ட்விட்டரில் ஒரு நண்பர் பரிந்துரை செய்திருந்தார் அதனால் பார்த்தேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல ஒரு காமெடி ஆக்ஷன் படம் பார்த்த திருப்தி.
கொரியன் போலீஸ் யுனிவர்சிட்டியில் படிக்கிறார்கள் இரண்டு நண்பர்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக வேண்டா வெறுப்பாக போலீஸ் ட்ரைனிங்கில் சேர்ந்திருப்பது பின்னர் தெரிய வருகிறது. ஒரு நாள் இருவரும் ஏதாவது பொண்ணை கரக்ட் பண்ணலாம் என ஒரு க்ளப்பிற்கு செல்கின்றனர்.
இரவில் பார்ட்டி முடித்து வெளியே வரும் போது கண்ணெதிரே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஒரு இளம்பெணை தாக்கி கடத்துகிறது ஒரு கும்பல்.
இருவரும் வேனை விரட்ட அது கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்து விடுகிறது. இருவரும் கல்லூரியில் படித்ததை செயலில் காட்டி அந்த பெண்ணை காப்பாற்ற முடிவு செய்கிறார்கள்.
இவர்கள் தோண்ட தோண்ட படுபயங்கரமான மெடிகல் மாஃபியா பிண்ணனியில் இருப்பது தெரிய வருகிறது. இவர்கள் பெண்களின் கருமுட்டைகள், உடல் உறுப்புகள் என எல்லாவற்றையும் திருடி கடைசியில் கொன்று விடுகிறகிறார்கள் . இவ்வளவு கொடுரமான கும்பலை இரண்டு நண்பர்களும் எப்படி பிடித்தார்கள் என்பதை பற்றியது மீதி படம்.
படம் ஃபுல்லா காமெடி இருக்கிறது. காமெடி வேண்டும் என்றே திணிக்கப்படாமல் இயல்பாக இருக்கிறது. அதுவும் இரண்டு பேரையும் கட்டி தொங்க விட்டு இருக்கும் நிலையில் இரண்டு நண்பர்களும் பேசுவது செம காமெடி.
நண்பர்களாக வரும் இருவரும் சூப்பராக நடித்துள்ளார்கள். அதுவும் அந்த கண்ணாடி போட்டவர் செம காமெடி.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
OTT – ல் இல்லை. Send DM for download details.
IMDb Rating : 7.3/ 10
My Rating: 4/5
Directed by: Jason Kim (Kim Ju-hwan)
Screenplay by: Jason Kim
Produced by: Kim Jae-joong
Cast :
Park Seo-joon
Kang Ha-neul