Marco Polo – மார்க்கோ போலோ -2014- Season -1

இது பிரபல வணிகர் மற்றும் பயணியான மார்க்கோ போலோவின் வாழ்க்கையின் ஒரு பகுதியை தொடராக எடுத்துள்ளார்கள். இது எந்த அளவு உண்மையான சம்பவம் என்று தெரியாது அதனால் இதை ஒரு கற்பனையான தொடராகவே எடுத்துக் கொள்ளலாம். 

தொடர் நடக்கும் காலகட்டம் 1200 வருடங்களில்… தொடர் நடக்கும் இடம் முழுவதும் சைனா… மங்கோலிய அரசன் செங்கிஸ்கானின் பேரனான குப்லைகான் சைனாவை அடித்து துவைத்து பெரும்பாலான சைனாவை அவன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்து பேரரசானாக ஆட்சி செய்து வருகிறான். 
இந்த நாட்டுடன் வணிகம் செய்து வருபவர் மார்கோ போலோவின் தந்தை. அரசனுடன் ஒரு ட்லிங் சரியாக அமையாமல் போகிறது.. இதனை சரிசெய்ய தன்மகனை அரசனான குப்லைகானுக்கு அடிமை/ உதவியாளராக விட்டு விட்டு திரும்ப வருகிறேன் என்று போய் விடுகிறார்.
குப்லைகானுக்கு சவாலாக  ஒரே ஒரு சின்ன ஊர் இருக்கிறது ( நம்ம மகிழ்மதி மாதிரி) . இவர்கள் ஊரைச் சுற்றி மிகப்பெரிய சுவர் ஒன்றை கட்டி உள்ளே வசிக்கின்றனர். விவசாய நிலங்களும் உள்ளேயே செழிப்பாக இருக்கிறது. இதனால் எத்தனை மாதங்கள் அந்த நாட்டை முற்றுகை இட்டாலும் ஒன்னும் பண்ண முடியவில்லை. 
மார்க்கோ போலோவின் பேச்சுத்திறனால் ஈர்க்கப்படுகிறான் குப்ளைகான். இதனால் அவனுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுத்து போர் வீரரக்கான எல்லா பயிற்சிகளையும் கொடுக்கிறான். சிறிது காலத்தில் அரசனின் செல்லப்பிள்ளை ஆகிறான் மார்க்கோ. 
மார்கோவிற்கு சில வேலைகள் கொடுக்கப்படுகிறது. சிலவற்றை திறம்பட முடிக்கிறான். இதில் இளவரசனுக்கும இவனுக்கும் உரசல் ஏற்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக ராஜாங்க காரியங்களிலும் ஈடுபட ஆரம்பிக்கிறான். 
இதற்கு நடுவில் சுவருக்குள் இருக்கும் நாட்டு அரசர் இறந்து விட அந்த நாட்டின் பிரதமர் அரசியை ஏமாற்றி ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றுகிறான். திறமையான கொலையாளியான தனது சகோதரியை அரசனை கொல்ல அனுப்பி வைக்கிறான். 
குப்ளைகான் சுவர்களை தகர்த்து அந்த நாட்டை வென்றானா? வில்லன் அனுப்பிய சதிகாரியால் கொல்லப்பட்டாரா? போரில் வெற்றி கிட்டியதா? போரில் மார்க்கோவின்  பங்கு என்ன என்பதை பரபரப்பாக சொல்கிறது தொடரின் முதல் சீசன். 
தொடர் நன்றாக ஆர்வத்துடன் பார்க்கும் வகையில் உள்ளது. பழைய காலத்து செட்டிங்குகள் , உடைகள் வடிவமைப்பு போன்றவை அருமை… 
அரசராக நடித்தவர் , வில்லன் மற்றும் மார்கோ போலோவாக நடித்துள்ளார்கள் சிறப்பாக தங்களது கதாபாத்திரத்தில் பொருந்தி உள்ளனர். 
பிண்ணனி இசை , ஒளிப்பதிவு ரொம்பவே சிறப்பாக உள்ளது. சண்டைக்காட்சிகள் மற்றும் போர் சம்பந்தப்பட்ட காட்சிகள் விறுவிறுப்பாக உள்ளது. 
வன்முறை மற்றும் வயது வந்தோர்க்கான காட்சிகள் எக்கச்சக்கமாக உள்ளது. Spartacus அளவு இல்லை என்றாலும் அது கூட போட்டி போடும் அளவுக்கு உள்ளது. 
IMDb Rating : 8.0/10
Available in Netflix 
Created by
John Fusco
Starring
Lorenzo Richelmy
Benedict Wong
Joan Chen
Rick Yune
Amr Waked
Remy Hii
Zhu Zhu
Tom Wu
Mahesh Jadu
Olivia Cheng
Uli Latukefu
Chin Han
Pierfrancesco Favino
Ron Yuan
Claudia Kim
Jacqueline Chan
Leonard Wu
Thomas Chaanhing
Chris Pang
Gabriel Byrne
Michelle Yeoh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

The Lost City – 2022The Lost City – 2022

The Lost City – 2022 Movie Review In Tamil  Sandra Bullock, Brad Pitt & Channing Tatum – இந்த மூணு பேர் போதாதா இந்த படத்தை பார்க்க.  வழக்கமான Formula படி வந்து இருக்கும் ஒரு

Sex Education- 2019Sex Education- 2019

செக்ஸ் எஜுகேஷன்(Sex Education Tamil Review ) – 2019 ஓட்டிஸ் (Otis) உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவன். அவனுடைய அம்மா(ஜீன்) அந்த ஊரில்  பெயர் பெற்ற பாலியல் ஆலோசகர் (Sex Counsellor) . பாலியல் ஆலோசகர் என்பதால் பாலியல் தொடர்பான

The Witcher – Season 1 – தி‌ விட்சர் (2019)The Witcher – Season 1 – தி‌ விட்சர் (2019)

The Witcher – Season 1 -2019  Series Tamil Review Season 2 Review  இது ஒரு அமானுஷ்யம் நிறைந்த நெட்ப்ளிக்ஸ் தொடர். லொக்கேஷன்கள், ட்ராகன்கள் பதவி ஆசை என ஆங்காங்கே Game of thrones -ஐ ஞாபக படித்தினாலும்