இது Brazil நாட்டில் இருந்து வெளிவந்த தொடர். 1 Season அதில் 7 Episode-கள் உள்ளது. எல்லா Episode களுமே கிரிஸ்ப்பாக 30 நிமிடங்கள் ஓடுகிறது.
படத்தின் கதையை பற்றி பார்க்கலாம். Eric – போலீஸ் துறையில் வேலை பார்க்கும் ஒரு அதிகாரி. இவனுடைய மனைவி காட்டில் ஏற்படும் தீயில் சிக்கி சிறு வயது மகள் கண்முன்னே இறந்து விடுகிறாள். போலீஸ் துறை இது விபத்து என கூறுகிறது ஆனால் Eric கண்டிப்பாக இது சதி வேலை என்கிறான். இதனை விடாமல் தோண்ட ஆரம்பிக்கிறான்.
மறுநாள் கடற்கரையில் ஒரு பிங்க் நிற டால்பின் இறந்து கிடக்கிறது. அதை தூக்கி டிக்கியில் போட்டு விட்டு நைட் ஓபன் பண்ணி பார்த்தால் அது இறந்து போன மனிதனாக மாறியுள்ளது. அதிர்ச்சியடைந்த ஹீரோ சத்தமில்லாமல் அந்த டெட் பாடியை காட்டில் போட்டு விட்டு தானே விசாரணையில் இறங்குகிறான்.
இன்னொரு பக்கம் பார் நடத்துகிறார் Ines எனும் பெண். இவர் சாதாரண பெண் கிடையாது இவள் Cuca எனப்படும் அந்த நாட்டு நாட்டுப்புற பாடல்களில் வரும் சூனியக்காரி. இவருடன் Camilia எனும் பெண்ணும் , Tutu எனும் ஒரு வளர்ந்த மனிதனும் உள்ளனர்.
இன்னொரு புறம் ஒரு கார்ப்பரேட் காட்டில் வாழும் மக்களை காலி செய்யுமாறு வற்புறுத்தி வருகிறது. தான் மனைவி இறந்த தீ விபத்து கூட இந்த கம்பெனியால் உருவாக்கப்பட்டதாக இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரிக்கிறார்.
ஊரின் இன்னொரு பக்கம் உள்ள சேரியில் ஒருத்தர் சக்கர நாற்காலியில் வசிக்கிறார், இன்னொருவன் கால் ஊனமான நிலையில் அவருடன் இருக்கிறான். அவன் சின்ன சின்ன மேஜிக்குகள் செய்கிறான்.
Ines மற்றும் அவளது குரூப்பிற்கும் போலீஸ் அதிகாரியான Eric ற்கும் உரசல் ஏற்படுகிறது. இவர்களின் எச்சரிக்கையையும் மீறி மனைவி மற்றும் பிங்க் டால்பின் மனிதனை பற்றி விசாரிக்கிறான்.
கடைசியில் இறந்த டால்பின் , Ines மற்றும் அவரது குரூப் அனைவரும் மனித இனம் கிடையாது என்றும் நாட்டுப்புற கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் என்றும் தெரியவருகிறது. இந்த நாட்டுப்புற கதாபாத்திரங்கள் அனைவரும் ஊருக்குள் வந்து மனிதர்களுடன் கலந்து வாழ்கின்றனர்.
ஆனால் சமீபகாலமாக இந்த நாட்டுப்புற கதாபாத்திரங்கள் ஒவ்வொருவராக கொல்லப்படுகின்றனர்.
இவர்களை கொல்வது யார்? Eric மனைவி இறந்ததுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு? சேரியில் வசிக்கும் அந்த இருவர் யார் என்பது போன்ற பல முடிச்சுகளை அவிழ்க்கிறது இந்த தொடர்.
முதலில் இந்த மாதிரி ஒரு வித்தியாசமான ஒரு தொடரை கொடுத்ததற்கு Netflix மற்றும் இத்தொடர் இயக்குனருக்கு பாராட்டுக்கள். இது கண்டிப்பாக ஒரு தனித்துவமான தொடர்.
நடித்த நடிகர்கள் மற்றும் படம் பிடித்த லொக்கேஷன்கள், கிராஃபிக்ஸ் என அனைத்தும் அருமை. குறிப்பாக அந்த Ines கேரக்டரில் நடித்த பெண் நல்ல நடிப்பு. Eric குழந்தையாக வரும் Luna கதாபாத்திரம் செம் க்யூட் மற்றும் கடைசி கட்ட எபிசோட்களில் நன்றாக நடித்துள்ளார்.
போலீஸ் விசாரணை, நாட்டுப்புற கடவுள்கள், கார்ப்பரேட் சதி, கிராம் மக்கள் , சூனியக்காரி என அனைத்தையும் பக்காவாக இணைத்து அருமையான தொடரை கொடுத்து உள்ளார் இயக்குனர்.
நம்ம ஊரில் இது மாதிரி பல வருடங்களுக்கு முன்பு விடாது கருப்பு சீரியல் வந்தது. விடாது கருப்பு தொடர் அளவுக்கு இல்லை என்றாலும் அருமையான தொடர்.
Waiting for Season 2.
கண்டிப்பாக பாருங்கள்..
IMDb Rating: 7.4/ 10
My Rating: 4/5
Available In Netflix India .
Watch Trailer:
Created by:
Carlos Saldanha
Based on an original idea by:
Raphael Draccon
Carolina Munhóz
Written by:
Mirna Nogueira
Directed by
Luis Carone
Júlia Pacheco Jordão
Starring:
Marco Pigossi
Alessandra Negrini
Fábio Lago
Jessica Córes
Jimmy London
Wesley Guimarães
Áurea Maranhão
Julia Konrad
Thaia Perez
Manu Dieguez
José Dumont